புதன்கிழமை, நவம்பர் 6, 2024

சாப்பாட்டை பிடுங்கி விட்டு விரட்டி அடிக்கப்பட்ட எம்ஜிஆர்.. முதலமைச்சர் ஆனதும் பதிலடி கொடுத்த சம்பவம்

அரசியலிலும் சினிமாவிலும் தனி ஆதிக்கம் செலுத்திய எம்ஜிஆர், புரட்சி தலைவராக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தனக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கின் மீது நம்பிக்கை கொண்டு அரசியலில் துணிச்சலுடன் இறங்கினார். அதன் பலனாக 1977 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக இருந்தவர்.

இவர் முதன் முதலாக முதலமைச்சர் பதவியேற்றதும், சாப்பாட்டை பிடிங்கி விட்டு விரட்டி அடித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தரமான சம்பவத்தை செய்தார். கும்பகோணத்தில் எம்ஜிஆர் அவரது அண்ணன் சக்கரபாணியும் 2வது, 3வது படிக்கும் பொழுது வறுமையின் காரணமாக சாப்பிடாமல் இருந்தனர்.

Also Read: செருப்பு தைப்பவருக்கு அதிர்ச்சி கொடுத்த எம்ஜிஆர்.. நிஜத்திலும் ஹீரோ என நிரூபித்த வாத்தியார்

இதனால் படிக்க வேண்டாம், நாடக கம்பெனிக்கு சென்றால் சாப்பாடு கிடைக்கும் என அங்கு சென்றனர். அதற்கு அவரது தாயார் சத்யா, எப்படியாவது சாப்பிடட்டும் என விட்டு விட்டார். ஆனால் அங்கு மூன்று வேலை சாப்பாடு கிடைக்காது. இரண்டு வேலை மட்டுமே அதுவும் நடிகர்களுக்கு மட்டும் கிடைக்கும்

அப்படி சாப்பிடும்பொழுது அவர்களுடன் எம்ஜிஆரும் அவரது அண்ணனும் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தனர். அப்பொழுது அங்கு இருந்த ஒரு நபர் இருவரையும் கையைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளி கதவை சாத்திவிட்டனர். அந்த அளவிற்கு வறுமையின் பிடியில் இருந்தவர் எம்ஜிஆர்.

Also Read: எம்ஜிஆரை பார்த்து பதுங்கிய சிவாஜி.. பூரித்துப்போன மக்கள் திலகம்

இதை மனதில் வைத்துக் கொண்டு அவர் முதலமைச்சர் ஆனதும் குழந்தைகள் பசி கொடுமையை அனுபவிக்க கூடாது என சத்துணவு திட்டத்தை உருவாக்கினார். வறுமையில் வாடும் குழந்தைகளை பள்ளிக்கு வர வைத்து உணவு அளிக்க வேண்டும் என்பதில் எம்ஜிஆர் திட்ட வட்டமாக இருந்து அதை செயல்படுத்தினார்.

இதை நடைமுறைப்படுத்தியதால் அவருக்குள் ஒரு மன நிம்மதியே வந்தது. தன்னையும் தன்னுடைய அண்ணன்களையும் சாப்பிட விடாமல் விரட்டியடித்த அந்த கும்பலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே மதிய உணவுத் திட்டத்தை சிறப்புடன் மேம்படுத்தினார்.

Also Read: ஹீரோவாக நடித்த பொற்காலத்தில் வில்லனாகவும் களமிறங்கிய சிவாஜியின் 5 படங்கள்.. ரங்கோன் ராதாவை மறக்க முடியுமா?

- Advertisement -spot_img

Trending News