மியா கலிஃபா என்ற பெயரை தெரியாத நபர்களே இருக்க முடியாது. அந்தளவிற்கு இப்பெயர் வேர்ல்டு ஃபேமஸ். உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் மியா கலிஃபா.
முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலிஃபா தற்போது தனது இரண்டாவது கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ஆபாச பட நடிகையான மியா கலிஃபா கடந்த 2011ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழனை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து சென்றனர்.
![mia khalifa](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/07/maiya-kalipa.jpg)
இதையடுத்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடனை மியா கலிஃபா கடந்த 2020ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக இத்திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் செய்து கொண்டார்.
இந்நிலையில் மியா கலிஃபா தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “எங்கள் திருமண உறவைத் தக்கவைத்துக் கொள்ள கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக எடுத்துக் கொண்டோம். அது பலன் அளிக்காததால் தற்போது விவாகரத்து செய்ய உள்ளோம்.
![mia-khalifa](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
மேலும் இருவரும் திருமண உறவை முடித்துக் கொண்டாலும் எங்களது நட்பு எப்போதும் தொடரும்” என்று மியா கலிஃபா தெரிவித்துள்ளார்.