ஒரு காலத்தில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த மோகன் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி தான் உண்டு தன் குடும்பம் உண்டு என இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பல வெள்ளிவிழா படங்களை கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் மோகன். ஒரு பக்கம் ரஜினி கமல் மாஸ் நடிகர்களாக வலம் வந்து கொண்டிருந்த போது இன்னொரு பக்கம் காதல் நாயகனாக அவர்களே தூக்கி சாப்பிட்டவர்.
மேலும் மோகன் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்துமே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் அளவுக்கு இளையராஜாவின் இசையில் செமையாக இருக்கும். பாடலுக்காகவே பல படங்கள் ஓடியது.
ஒரு கட்டத்தில் ஒரு நடிகை, மோகன் மீது உள்ள காதலால் அவர் கிடைக்காத விரக்தியில் அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக பரப்பி விட்டு விட்டார். இதன் காரணமாக பல நடிகைகளும் மோகன் உடன் நடிக்க தயங்கியதாக அப்போதே பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.
அப்போது வீட்டிற்குள் சென்றவர் தான். அதன் பிறகு படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார். இடையில் சில இயக்குனர்கள் முன்னணி நடிகர்களுக்கு அப்பா வேடத்தில் நடிக்க கேட்டும், நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அந்த வாய்ப்புகளை நிராகரித்து விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர்கள் ஒரு குறிப்பிட்ட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அதில் வந்த மோகன் கே ஜி எஃப் யாஷ் ரேஞ்சுக்கு தாடி வளர்த்து வேறு விதமாக உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.