நடிகர் சிம்பு தற்போது மாநாடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்த இப்படம் சில காரணங்களால் நவம்பர் 25 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்கள் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது நான் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தை தயாரித்தேன்.ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை இதனால் எனக்கு 15 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
அதனால் நடிகர் சிம்பு தனது தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் இலவசமாக நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு நடிகர் சிம்புவும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அதன் பிறகு சிம்பு ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சிம்புவின் தாய் உஷா ராஜேந்தர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது சிம்புவுக்கு எதிராக மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட பலரும் செயல்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் மாநாடு படத்தை வெளியிட முடியாத படி மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
சிம்புவின் தந்தை டி ராஜேந்தர், இந்த விஷயத்தை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்வோம் என்று தெரிவித்துள்ளார். தற்போது சிம்பு மும்பையில் வெந்து தணிந்தது காடு பட ஷூட்டிங்கில் உள்ளார். மாநாடு படத்தில் சிம்புவை திரையில் காண ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு பட வெளியீடு தள்ளிப் போனது ஏமாற்றமாக உள்ளது.
மேலும் ஒரு படத்தின் வெற்றி, தோல்வி இரண்டும் படக்குழுவை சேர்ந்த அனைவரும் சம்பந்தப்பட்டது. இதில் நடிகர் மட்டும் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம் என்று ரசிகர்கள் சிம்புவுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இந்த விஷயத்தை முதலமைச்சர் தலையிட்டு முடித்து வைத்தால் மட்டுமே சிம்புவின் படங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.