கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்து மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இந்த படத்தில் குஷ்பு, ஊர்வசி, ரூபிணி, மனோரமா, நாகேஷ் உள்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
முழுக்க முழுக்க காமெடி கலந்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பீம்பாய் என்ற கதாபாத்திரம் ரொம்பவே பிரபலம். அதில் அவிநாசி கேரக்டரில் நடித்திருக்கும் நாகேஷை பீம் பாய் ஒரே கையில் அலேக்காக தூக்கி செல்வார். இந்தக் காட்சி அப்போது பலராலும் ரசிக்கப்பட்டது. மேலும் பீம்பாய் பீம்பாய் அந்த லாக்கர்ல இருக்குற 6 லட்சத்தை எடுத்து அவிநாசி மூஞ்சில விட்டெரி என்ற வசனமும் பிரபலமாக இருந்தது
அவருடைய உயரம் 6.5 அடி ஆகும். அவரின் இந்த உயரத்திற்காகவே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பஞ்சாபைச் சேர்ந்த இவருடைய உண்மையான பெயர் பிரவீன் குமார். இவர் தமிழில் நடிக்க வருவதற்கு முன்பே ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் வெளியான மகாபாரதம் என்ற தொடரில் பீமன் ஆக நடித்து வரவேற்பை பெற்றார். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு விளையாட்டு வீரரும் ஆவார்.

ஆசிய அளவில் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட பல போட்டிகளில் கலந்து கொண்டு இவர் தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். அது தவிர விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதினையும் இவர் வாங்கியுள்ளார். தற்போது இவர் சினிமாவை விட்டு ஒதுங்கி அரசியலில் கால் பதித்துள்ளார்.

தொண்ணூறுகளின் ஆல் டைம் ஃபேவரைட் ஆன இந்த திரைப்படத்தை இப்பொழுதும் குழந்தைகள் விரும்பி பார்க்கின்றனர். இந்தப் படத்தில் இடம் பெற்ற வச்சாலும் வைக்காம போனாலும் என்ற பாடல் தற்போது சந்தானத்தின் டிக்கிலோனா என்ற திரைப்படத்தில் இடம் பெற்று தற்போது வைரலானது.