ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

ஹைதராபாத் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் டேவிட் வார்னர்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் மூன்றாவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக ஆடி 20 ஓவருக்கு 187  ரன்களை குவித்தது.

பின் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஹைதராபாத் அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து ஓப்பனிங் வீரர்கள் வார்னர், விஹாரி விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் களமிறங்கிய பிரைஸ்டோ, மனிஷ் பாண்டே இருவரும் ஓரளவு சமாளித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர் .

இருவரும் தங்கள் பங்கிற்கு அரை சதம் அடித்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர். ஹைதராபாத் அணி பிரைஸ் டோ விக்கெட்டை இழந்ததும் மொத்தமாக தடுமாறியது. பின் வரிசையில் பேட்டிங் செய்ய பெரிய அளவில் வீரர்கள் யாரும் இல்லை. விஜய் சங்கர் பல நாட்களாக கிரிக்கெட் ஆடாமல் பார்மில் இல்லை.

அதுமட்டுமின்றி கேன் வில்லியம்சனை அணியில் எடுக்காத காரணத்தால் ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக இருந்தது. மணீஷ் பாண்டேவுக்கு பின் அதிரடியாக ஆட கூடிய வீரர்கள் யாரும் இல்லை.

Kanewillamson-cinemapettai.jpg
Kanewillamson-cinemapettai.jpg

மணிஷ் பாண்டே சிறப்பாக ஆடினாலும் ,போட்டியை முடிக்கும் அளவிற்கு ஹைதராபாத் அணியில் அதிரடி வீரர்கள் இல்லை. வார்னர், கேன் வில்லியம்சனை எடுக்காத காரணத்தினால் தான் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்தது என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News