சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

கமலிடம் இருந்து வாய்ப்பை தட்டிப் பறித்த மைக் மோகன்.. உஷாராக பல படங்களில் வெற்றியை கொடுத்த நடிகர்

Actor Mohan And Kamal: 80களில் ரஜினி, கமல் என இரண்டு பேரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய நடிகர் தான் மைக் மோகன். இவருடைய நடிப்பின் மூலம் தனக்கென ஒரு தனித்துவத்தை அமைத்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று பல சூப்பர் ஹிட் படங்களை வெற்றிகரமாக கொடுத்து வந்திருக்கிறார். முக்கியமாக காதல் சம்பந்தமான படங்களில் நிறைய நடித்து இவருடைய மார்க்கெட்டை உயர்த்தி நிறுத்தி இருக்கிறார்.

அப்படிப்பட்ட இவர் மைக் பிடித்து பாடாத பாடல்களே கிடையாது. கண்டிப்பாக இவர் நடித்த எல்லா படங்களிலும் மேடையில் மைக்கை பிடித்து பாடிய பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கும். ஆனால் இவருக்கு முன்னால் இந்த மாதிரி மைக்கை பிடித்து பாடிக் கொண்டிருந்தவர் தான் உலக நாயகன் கமலஹாசன்.

Also read: கமலஹாசன் வாரிசு அடுத்து நாங்கள் தான் என போட்டி போடும் 4 நடிகர்கள்.. உலக நாயகன் கொடுத்த சர்டிபிகேட்

இன்னும் சொல்லப்போனால் மைக் கமல் என்றுதான் இவருக்கு பெயர் கிடைத்திருக்க வேண்டியது. ஏனென்றால் மோகன் வருவதற்கு முன் கமலுக்கு தான் இந்த மாதிரி வாய்ப்புகள் அனைத்தும் கிடைத்தது. பல இயக்குனர்களும் கமலை தான் வலை போட்டு தேடிப் பிடித்து நடிக்க வைத்தார்கள். அப்படி நடித்ததினால் கமல் நிறைய வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டார்.

அதனால் பல மொழிகளிலும் இவர் நடிப்பதற்கு கமிட் ஆகி இருந்தார். அந்த சூழ்நிலையில் இவரால் தமிழில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. அப்பொழுது அனைத்து இயக்குனர் கவனமும் மோகன் மீது திரும்பிவிட்டது. இதனால் மோகன் தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பெரிய ஆளாகி மைக் மோகன் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

Also read: பிளேபாய் அவதாரம் எடுத்த சிம்பு.. உலக நாயகன் கமலஹாசன் கொடுத்த ஐடியா

இதனை தொடர்ந்து கமல் மற்றும் மோகன் இருவரும் சேர்ந்து கோகிலா என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள். அந்தப் படத்திலேயே கமலிடம் இருந்து மைக்கை பிடுங்கி மோகனிடம் கொடுத்து சிம்பாலிக்கா இவர்தான் மைக் மோகன் என்று சொல்லும்படியாக விஷயங்கள் நடந்திருக்கும். இப்படி கமலிடம் இருந்து வாய்ப்பு மோகனுக்கு கிடைத்தாலும் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு பல படங்களில் உஷாராக வெற்றியை கொடுத்தார்.

அதனால் தான் இவருக்கு மைக் மோகன் என்ற பெயரும் கிடைத்தது. யாருக்கும் எந்த ஒரு விஷயமும் அவ்வளவு எளிதாக கிடைத்திடாது. திறமை இருந்து முயற்சி பண்ணினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக மோகன் அந்த காலகட்டத்தில் சிறந்து விளங்கினார். அத்துடன் தற்போது தமிழ் சினிமாவில் மோகன் ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார்.

Also read: ஓடுற குதிரைகளை வளைத்து போடும் கமலஹாசன்.. வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரைகள்

Trending News