சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

மூன்றாவது முறையாக தனுஷுடன் இணைந்த மில்க் பியூட்டி நடிகை.. எதிர்பார்ப்பை கிளப்பிய செல்வராகவன் படம்

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, தேவதையை கண்டேன், மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நானே வருவேன் என்ற படத்தில் களமிறங்கவுள்ளனர்.

இந்த படத்திற்கான டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி செம வைரல் ஆனது. ஆனால் அதற்கு முன்பே செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் 2024 ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் 2 என்ற படம் வெளியாக இருப்பதாக தெரிவித்தனர்.

அந்த படத்திற்கு முன்பே குறுகிய காலத்தில் நானே வருவேன் என்ற படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். இந்த படத்தை தனுஷின் அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார்.

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் நானே வருவேன் படத்தில் தனுஷுடன் மூன்றாவது முறையாக பிரபல நடிகை தமன்னா ஜோடி சேர உள்ளார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் எனவும் அதில் ஒருவர் தமன்னா என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு ஹீரோயின் யார் என்பதற்கான பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருக்கிறதாம். தமன்னா மட்டும் தனுஷ் கூட்டணியில் முன்னதாக உருவான படிக்காதவன் மற்றும் வேங்கை போன்ற படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

dhanush in s 12 nane varuven

சமீபகாலமாக தமன்னா தமிழ் சினிமாவின் அதிர்ஷ்டமில்லாத நடிகையாக வலம் வருகிறார். இதை தனுஷின் நானே வருவேன் படம் மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தமன்னாவுக்கு தமிழில் கைவசம் இருக்கும் ஒரே ஒரு படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamannaah-4

Trending News