திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நாலா பக்கம் சர்ச்சையை கிளப்பும் மில்லர்.. விலை உயர்ந்த அந்த காரை கேட்டு தயாரிப்பாளருக்கு டார்ச்சர்

வாத்தி படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் கேப்டன் மில்லர். இப்படம் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் ப்ரொடக்ஷனில் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என நம்பப்பட்ட நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பில் தொடர்ந்து வரும் பிரச்சனையால் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.

பல எதிர்பார்ப்புகளை முன் வைக்கும் விதமாக இருந்து வரும் இப்படத்தில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் ஆக்சன் நிறைந்த இப்படம் தனுஷுக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தரும் என்ற எதிர்பார்ப்பை முன்வைக்கிறது.

Also Read: விஜய்யுடன் நடிக்கும் காட்சியில் வம்பு பண்ணிய வடிவேல்.. சூட்டிங் ஸ்பாட்டில் பிரபுதேவாவுடன் மோதிய வைகைப்புயல்

இது ஒரு புறம் இருக்க திரும்பிய பக்கம் எல்லாம் சிக்கல் ஏற்பட்டு தயாரிப்பாளருக்கு வேதனையை உண்டு படுத்து வருகிறது. இப்படத்தை ஆரம்பிக்கும் போதே தனுஷ் வந்து செல்ல இனோவா கார் வழங்கப்பட்டதாம். அதை விரும்பாத தனுஷ் தனக்கு ஒரு பெரிய ஆடம்பர கார் தான் வேண்டும் என்று பிரச்சனையை ஆரம்பித்துள்ளார்.

இப்பிரச்சனை முடிவுக்கு வந்த பிறகு ஷூட்டிங்கை மேற்கொண்ட படக்குழுவினருக்கு இதைவிட பெரிய பிரச்சனை ஒன்று காத்திருந்தது. அதாவது இப்படத்தின் கதைக்கு ஏற்ப பல காட்சிகளில் குண்டு வெடிப்பது போல காட்டப்பட வேண்டுமாம்.

Also Read: மாமன்னன் படம் ஓட வாய்ப்பே இல்ல.. இப்பவே உதயநிதி, வடிவேலு தலையில் இடியை இறங்கிய பிரபலம்

இதைத் தொடர்ந்து மதுரையில் சூட்டிங் மேற்கொண்ட படக் குழுவினர் ஏற்படுத்திய குண்டு வெடித்தல் போன்ற காட்சி அங்கு சுற்றி உள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் பிரச்சனையை உருவாக்கியது. அதேபோல் தென்காசியிலும் படப்பிடிப்பை மேற்கொண்ட போது அதே பிரச்சனையை சந்தித்தார்கள்.

இது போன்ற தொடர் பிரச்சினைகளால் படப்பிடிப்பு தாமதம் ஆகுவதால் தயாரிப்பாளர் தரப்பில் வேதனையை உண்டுபடுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்த தீபாவளிக்கு இப்படம் வெளியாகாதோ என்ற கேள்வியை முன் வைக்கிறது. பல எதிர்பார்ப்புகள் கொண்ட இப்படம் இது போன்ற பிரச்சினைகளை மீறி குறிப்பிட்ட தேதியில் வெளிவருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: கதை இல்லாமல் மட்டமாக உருட்டும் ஜீ தமிழ் சீரியல்.. காரி துப்பும் கார்த்திகை தீபம்

Trending News