தயவுசெய்து வாய்ப்பு கொடுங்க என கெஞ்சும் மாடல் அழகி.. காட்டிய கவர்ச்சிக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகுமா?

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பொருத்தவரை நடிகர்களை பிடித்து விட்டால் அந்த நடிகர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், எந்த மொழியை சேர்ந்தவர்கள் என்பதை பற்றியெல்லாம் யோசிக்க மாட்டார்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். அதனாலேயே பல நடிகர்களும் தமிழ் சினிமாவில் நடித்து விட வேண்டும் என ஆசைப்படுவது உண்டு.

தமிழ் சினிமாவில் தமிழ் நடிகர்கள் நடித்ததை விட மற்ற மொழி நடிகர்கள் தான் அதிகம் நடித்துள்ளார்கள். தற்போது மணிப்பூரை சேர்ந்த மீனாட்சி ஜெய்ஸ்வல் மிஸ் உத்தர பிரதேசம் என்ற டைட்டிலை வென்றார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளதாக கூறியுள்ளார்.

எப்போது மாடல் அழகிகள் மாடல் துறையில் வெற்றி பெற்றுவிட்டால் அதற்கு அடுத்தது சினிமா துறையில் தான் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். அந்த எண்ணம் தற்போது மாடல் அழகி மீனாட்சி ஜெய்ஸ்வல்கும் வந்துள்ளது.

minakshi jaiswal
minakshi jaiswal

தாதி என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர். தற்போது விஜய் யேசுதாஸ் நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் 3D படத்தில் நடிகையாக நடித்துள்ளார். இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி , மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மீனாட்சி ஜஸ்வல் மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பதற்காக ஆர்வம் இருக்கிறது. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களிடம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வாய்ப்பு கேட்டு வருவதாகவும் விரைவில் தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு இடத்தை பிடித்து விடுவேன் என மன உறுதியில் இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.