தமிழகத்தில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள், அதிமுக கட்சியின் சார்பாக முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இவரது நலத்திட்டங்களால் தற்போது தமிழகம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசியபோது, முதல்வர் சொல்லாதவற்றையும் செய்து சாதனை புரிந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அதிமுக கண்டிப்பாக ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்று கூறியிருக்கிறார் கடம்பூர் ராஜு.
அதாவது திருச்செந்தூர் அருகே செய்தியாளர்களிடம் பேசியபோது, 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து, அம்மாவின் வழியில் நடந்து தமிழக மக்களுக்காக சிறப்பான ஆட்சியை எடப்பாடியார் நடத்தி வருவதாக குறிப்பிட்டிருக்கிறார் கடம்பூர் ராஜு.
அதேபோல், எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சி சார்பில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 100% நிறைவேற்றியதோடு, சொல்லாததையும் செய்து சாதனை புரிந்துள்ளார் என்று கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
அந்த வகையில் குடிமராமத்து பணிகளை செய்து நீர்நிலைகளை தூர்வாரியதோடு, காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக முதல்வர் மாற்றியுள்ளார் என்றும், ஏழை மாணவர்களின் மருத்து கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு செய்து சாதனை படைத்துள்ளார் என்றும், தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள்- ஐ தொடங்கி வைத்துள்ளார் என்றும், கொரோனா காலத்தில்கூட பல்வேறு முதலீடுகளை ஈர்த்து தமிழக பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்தி உள்ளார் என்றும் கடம்பூர் ராஜு குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி அனல் மின் நிலைய பணிகளை துரிதப்படுத்தியதோடு, மீனவ மக்களின் நலன் கருதி தூண்டில் வளைவுகளை அமைக்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதேபோல், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 2500 ரூபாய் தமிழக அரசின் சார்பாக கொடுக்கப்பட்டு வருகிறது என்றும், தமிழக முதல்வர் கிறிஸ்தவ மக்களின் கோரிக்கையை ஏற்று ஜெருசலேம் புனித பயணத்திற்கு, ஏற்கனவே வழங்கி வந்த 20,000 உதவி தொகையை தற்போது 37 ஆயிரத்து 500 ரூபாயாக முதல்வர் உயர்த்தி உள்ளார் என்றும் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
எனவே, இவ்வாறு தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு அயராது பாடுபடும் எடப்பாடியாரின் தலைமையில் செயல்படும் அதிமுக கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக ஹாட்ரிக் வெற்றி பெரும் என்று கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.