சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது.. போலீசிடம் சிக்கியது எப்படி தெரியுமா.?

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிட்டத்தட்ட 3 கோடிக்கு மேல் பண மோசடி செய்ததாக தகவல் கிடைத்தது. இதனால் ராஜேந்திரபாலாஜி தப்பித்து சென்றதால் போலீசாரால் அவரை பிடிக்க முடியாமல் தடுமாறினர்.

ஆனால் ராஜேந்திரபாலாஜி பிடிப்பதற்கு தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு தீவிரமாக அவரை கண்காணித்து வந்தனர். அதாவது முதலில் டெல்லியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. பின்பு கேரள மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தற்போது கிடைத்து அவரை கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்தனர். பல நாட்களாக தப்பித்துக் கொண்டிருந்த இவர் தற்போது எப்படி சிக்கினார் என்ற தகவல்களை வெளியாகி உள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுதிகளில் தங்கினால் சிக்கிக் கொள்வோம் என்பதற்காகவே தொடர்ந்து காரிலேயே பயணம் செய்துள்ளார். மேலும் குடும்பத்தில் இருப்பவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் எந்த மொபைல் நம்பரில் கால் வந்தாலும் அதனை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்துள்ளனர்.

சமீபத்தில் அவர் தனது நெருங்கிய நண்பருடன் பேசும்போது கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று பிடித்துள்ளனர். ஆனால் ராஜேந்திர பாலாஜி தப்பிக்க முயன்றதால் சாலையிலேயே அவரை கைது செய்தனர்.

19 நாட்களாக தவித்துக்கொண்டிருந்த ராஜேந்திரபாலாஜி கைது செய்ததால் அதிமுக அமைச்சர்கள் பீதியில் உள்ளனர். மேலும் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை திமுக அரசு கையிலெடுத்து தற்போது அனைவரையும் கைது செய்து வருகிறது. திமுக அரசு தற்போது தொடர் நடவடிக்கையால் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்

Trending News