சினிமாவை பொறுத்தவரை தற்போது யார் வேண்டுமானாலும் ஹீரோவாக நடிக்கலாம் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. அந்த வகையில் பலரும் ஹீரோ அவதாரம் எடுத்து நடித்து வருகிறார்கள். அதில் இசையின் நாயகனாக இருந்த ஹிப் ஹாப் ஆதியும் ஒருவர். இதனால் ஐந்து படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது வீரன் படத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தை இயக்கியவர் மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன். அத்துடன் இப்படத்திற்கு இசையமைத்தவர் ஹிப்ஹாப் ஆதி தான். இதில் வினய் ராய், ஆதிரா ராஜ், முனீஸ்காந்த், காலி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் இப்படம் வருகின்ற ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.
Also read: ஸ்பைடர் மேனாக மாறிய ஹிப் ஹாப் ஆதி.. ட்ரெண்டாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிட்டிருந்தார்கள். இதனை பார்த்த ரிப்போர்ட்டஸ் இயக்குனரிடம் இப்படத்தை பார்ப்பதற்கு அச்சு அசலாக மின்னல் முரளி படத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. அதாவது மின்னல் முரளி என்ற படம் 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் சூப்பர் ஹீரோவே மையமாக வைத்து வெளிவந்தது. இப்படத்தின் ரீமிக்ஸ் படமா என்று கேள்வியை கேட்டு இருக்கிறார்கள். அதற்கு இயக்குனர் இந்த படத்தின் கதையை 2017 ஆம் ஆண்டு நான் எழுதி முடித்து விட்டேன்.
இதனால் மின்னல் முரளி படத்திற்கும் வீரன் படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க வேறுபட்ட கதையை அமைத்து இருக்கிறது. இப்படத்தை நீங்கள் முழுமையாக தியேட்டரில் பார்க்கும் பொழுது அதை உணர்வீர்கள் என்று கூறி இருக்கிறார். அத்துடன் இந்த படத்திற்காக 40-க்கும் மேற்பட்ட சி ஜி சாட்ஸ் பயன்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.
Also read: இந்தியாவில் முதன் முதலில் டாக்டர் படிச்சது நான் தான்.. ஹிப் ஹாப் தமிழா பெருமிதமான பேச்சு
இப்படம் வெளிவரும் வரை தயவுசெய்து அனைவரும் காத்திருங்கள் அதுவரை தவறான பதிவுகளை யாரும் பகிர வேண்டாம் இது நான் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் ட்ரெய்லர் பாக்குற நமக்கே மின்னல் முரளி படம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த அளவுக்கு ஒன்று போல தான் தெரிகிறது.
இயக்குனர் சொன்னபடி இப்படம் பார்ப்பவர்களை கவர்ந்து விட்டால் இயக்குனருக்கு மட்டுமல்லாமல் ஹிப் ஹாப் ஆதிக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். ஏற்கனவே இவர் எடுத்த மரகத நாணயம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படமும் அதை நோக்கி பயணிக்கும் என்று எதிர்பார்க்கிறார். பார்க்கலாம் திரையரங்களில் வெளிவந்த போது இது புதுவிதமான வீரனா அல்லது மின்னல் முரளியின் அட்ட காப்பி தானா என்று.
Also read: கமலை போல் மாறத் துடிக்கும் ரஜினி.. விக்ரம் படத்தால் இப்படி ஒரு மாற்றமா?