ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

வன்கொடுமை புகாரில் சிக்கிய பாகிஸ்தான் நட்சத்திர வீரர்.. அத்துமீறிய ஆணவப் பேச்சு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா. இவருக்கு 35 வயதாகிறது. இஸ்லாமாபாத் காவல்துறையினர் இவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்துள்ளனர்.

இஸ்லாமாபாத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் இவர் மீது இந்த பாலியல் புகாரை அளித்துள்ளார். இவர் மட்டுமின்றி இவரது நண்பர் ஃபர்ஹான், துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதற்கு உடந்தையாக யாசிர் ஷா இருந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி யாசிர் ஷா தனக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளதாகவும், இதை பற்றி வெளியில் யாரிடமாவது கூறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டி உள்ளதாக அந்த 14 வயது சிறுமியை தெரிவித்துள்ளார்.

Yashir-shah-cinemapettai.jpg
Yashir-shah-cinemapettai.jpg

இந்த செயலுக்கு நியாயம் கேட்கும் விதமாக அந்த சிறுமி யாசிர் ஷாவிடம் வாட்ஸப்பில் பேசியுள்ளார். அதற்கு யாசிர் ஷா கேலி செய்ததுடன், உன்னை மட்டும் இல்லை, நாங்கள் பல சிறு வயது பெண்களை நாசம் செய்துள்ளோம் என ஆணவத்துடன் திமிராக பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி காவல்துறையை நாடி புகார் அளித்துள்ளார். மேலும் இந்த பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுக்கும் பட்சத்தில் யாசிர் ஷா 18 ஆண்டுகளுக்கு மேல் கம்பி எண்ண வேண்டியதிருக்கும் என்று கூறுகின்றனர். அவருடைய கிரிக்கெட் வாழ்வும் இதனோடு முடிவு பெற்று விடும்.

சுழற்பந்து வீச்சாளரான யாஷிர் ஷா பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளும், 25 ஒருநாள் போட்டிகளும் விளையாடியுள்ளார். அதிவேக 200 விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மொத்தமாக இவர் 235 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Trending News