Soodhu Kavvum 2 Trailer: விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் சூது கவ்வும். அதன் இரண்டாம் பாகம் மிர்ச்சி சிவாவின் நடிப்பில் எஸ் ஜே அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.
ஹர்சிகா, ராதாரவி, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 13ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. அது எப்படி இருக்கிறது என பார்ப்போம்.
பொதுவாக சிவாவின் படங்கள் எல்லாமே நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அவருடைய நடிப்புமே அப்படித்தான் சீரியஸாக முயற்சி செய்தாலும் சிரிப்பு மூட்டும் இதற்கே ஏராளமான ரசிகர்கள் உண்டு.
வெளியானது மிர்ச்சி சிவாவின் சூது கவ்வும் 2 ட்ரெய்லர்
அப்படித்தான் ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே நிதி அமைச்சர் கடத்தப்படுவது போல் காட்டப்படுகிறது. அதைத்தொடர்ந்து முந்தைய பட சாயலில் காட்சிகள் விரிகிறது.
அதில் சிவாவின் தோற்றமும் அவர் பேசும் வசனமும் வேற லெவலில் இருக்கிறது. அதிலும் நாங்க ஆட்சிக்கு வந்தால் எல்லார் அக்கவுண்ட்லயும் 7 லட்சம் டெபாசிட் செய்வோம் என்ற அரசியல் பஞ்ச் கலகலப்பூட்டுகிறது.
அதேபோல் தெளிவா நிதானமா முடிவெடுக்கணும், சரக்கு இருக்கா இல்ல வாங்கணுமா, பொண்ணுங்களோட கற்பனையில வாழ்ந்தால் தான் நிம்மதி இருக்கும் கல்யாணம் பண்ணா நிம்மதி போயிடும் போன்ற வசனங்கள் ரசிக்கும் வகையில் உள்ளது.
இப்படியாக ஃபன் ஓவர் லோட் ஆக இருக்கும் இப்படத்தை நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம் என ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியை மிஸ் செய்யும் உணர்வும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது.