புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மேடை நாகரிகம் இல்லாத மிஷ்கின்.. கண்ணாடி போட்டா மட்டும் போதாது பெரிய மனுஷனாவும் நடந்துக்கணும்

Mysskin: வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளும் வெகு சில பிரபலங்களில் மிஷ்கினுக்கு முக்கிய இடம் இருக்கிறது. ஏனென்றால் இவர் இருக்கும் இடமே சர்ச்சைகளின் கூடாரமாக தான் இருக்கும். அதிலும் மேடை நாகரிகம் என்றால் என்ன விலை என கேட்பவர் தான் இவர்.

அது மட்டுமல்லாமல் பொது இடம் என்று கூட பார்க்காமல் கெட்ட வார்த்தைகளை சகட்டு மேனிக்கு பேசும் இவருக்கு பல எதிர்ப்புகளும் கிளம்பி இருக்கிறது. ஆனால் அண்ணன் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதே கிடையாது.

Also read: மீன் குழம்புக்காக பொய்யாக நடித்த மிஷ்கின்.. ஊருக்குத்தான் உபதேசம் எனக்கு இல்ல.!

வாய்க்கு வந்ததை உளறி கொட்டி அடுத்த பிரச்சனையை ஆரம்பித்து விடுவார். அப்படித்தான் ஒருமுறை மேடையில் விஷாலை அவன் இவன் என்று ஒருமையில் பேசி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார். மேலும் தன் படங்களில் நடிக்கும் நடிகைகளையும் அவர் அதேபோன்றுதான் பேசுவார்.

தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் பிசாசு 2 படத்தில் நடித்திருக்கும் ஆண்ட்ரியாவை கூட ஒரு பேட்டியில் அவ இவ என்று ஏக வசனத்தில் பேசி இருந்தார். இதுவே பெரும் பிரச்சனையை கிளப்பிய நிலையில் விஜய் பற்றி பேசியும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

Also read: மிஸ்கின் கேட்ட கேள்வியால் கடுப்பான மணிரத்தினம்.. எந்த காலத்திலும் இவரின் மூஞ்சில முழிக்கவே மாட்டேன்னு போயிட்டாராம்

இப்படி போகும் இடமெல்லாம் ஏதாவது ஒரு அலும்பு செய்து வரும் இவரை பார்த்தாலே சிலர் நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கிப் போய் விடுவார்கள். அப்படிப்பட்ட மிஷ்கினை இப்போது எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர். அதாவது புரட்சித்தலைவர் எப்போதுமே மரியாதையான மனிதர்.

சிறு குழந்தைகள் என்றால் கூட வாங்க போங்க என்று தான் அழைப்பார். ஆனால் மிஷ்கின் அவருக்கு நேர்மாறானவர். இதனாலேயே ரசிகர்கள் இப்போது எம்ஜிஆர் மாதிரி கண்ணாடி போட்டால் மட்டும் போதாது பெரிய மனுஷனாகவும் நடந்துக்கணும் என்று இவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Also read: மிஸ்கின் கேட்ட கேள்வியால் கடுப்பான மணிரத்தினம்.. எந்த காலத்திலும் இவரின் மூஞ்சில முழிக்கவே மாட்டேன்னு போயிட்டாராம்

Trending News