திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

படப்பிடிப்பில் அதிக பிரசிங்கித்தனமாக செய்த மிஷ்கின்.. ஹீரோக்களை காக்கா பிடித்த மட்டமான வேலை

Director Mysskin; இயக்குனர் மிஷ்கின் எடுக்கக்கூடிய படங்கள் புரியாத புதிராகவும், அதே நேரத்தில் பார்க்க விறுவிறுப்பாகவும் எடுக்கக் கூடியவர். தற்போது இயக்குனர் பாதையில் இருந்து சற்று விலகி நடிகராக பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து மிரளும் அளவிற்கு தரமாக நடித்துக் காட்டியிருக்கிறார். இதனாலையே தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் இனி வரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இவரிடம் சொல்லும் படியான சில குறைகளும் இருக்கிறதாக நிறைய பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

Also read: சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்ல, ரஜினியே தான்.. மிஷ்கின் பேச்சுக்கு ப்ளூ சட்டை பதில்

அதாவது மாவீரன் படத்தில் இவரை நடிக்க வைக்கும் பொழுது இயக்குனர்களுக்கு பெரிய அளவில் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். அவர்களால் படத்தை சரியான முறையில் பண்ண முடியாத அளவிற்கு இவருடைய செய்கைகள் இருந்ததாக கூறுகின்றனர். எந்த வகையில் என்றால் இயக்குனர் ஒரு விஷயங்களை நினைத்து படப்பிடிப்பு நடத்தும் போது அதில் தேவை இல்லாமல் தலையிடுவாராம்.

அதுவும் எதற்காக என்றால் ஹீரோவை கரெக்ட் செய்வதற்காக. இவர்களை காக்கா பிடித்தால் மட்டுமே தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் என்பதால் இவர்களுக்கு சப்போர்ட்டாக சில விஷயங்களை இயக்குனரிடம் பேசுவது. மேலும் அவ்வப்போது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கும் இயக்குனர்களை வலுக்கட்டாயமாக கூப்பிட்டு வச்சு பேசி தொந்தரவு கொடுப்பாராம்.

Also read: 30 வருஷம் இந்த மனுசன அசைக்க முடியாது.. மிஷ்கின் பாராட்டிய அந்த இயக்குனர் யார் தெரியுமா?

அவர்களும் மிஸ்கின் பெரிய இயக்குனர் என்பதால் எதுவும் சொல்லாமல் முடிந்த அளவிற்கு அமைதி காத்து வந்திருக்கிறார்கள். இப்படி சூட்டிங் டைமில் அதிக பிரசிங்கித்தனமாக சில மட்டமான வேலைகளை செய்து இருக்கிறார். இதனாலையே இனிமேல் இவருக்கு வாய்ப்பு வந்தாலும் எந்த படத்திலும் சேர்க்க வேண்டாம் என்று எண்ணம் உருவாகிற அளவிற்கு இவருடைய நடவடிக்கைகள் இருந்திருக்கிறது.

இதே மாதிரி தான் விஜய் படமான லியோ படத்திலும் இந்த மாதிரியான புகார்கள் வெளிவந்தது. ஆனால் அதை கொஞ்சம் கூட மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து இதே மாதிரியே செய்து வருகிறார். இப்படியே போனால் வரும் கொஞ்ச நஞ்ச பட வாய்ப்புகளும் இவரை விட்டு போய்விடும் .

Also read: காலம் கடந்து பேசும், ரஜினியின் கடைசி இயக்குனர் இவர் தான்.. மிஷ்கின் கொடுத்த அப்டேட்டால் மிரளும் திரையுலகம்

Trending News