ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்கவுள்ள மிஸ்கின்.. வில்லன் நடிகரை வைத்து படம் பண்ண வந்த தைரியம்

இயக்குனர் மிஸ்கின் தற்போது படங்களை இயக்குவதை காட்டிலும், படங்களில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே உருவாகியுள்ள பிசாசு 2 படம் இன்னும் ரிலீஸாகாத நிலையில், தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார்.

தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வரும் மிஸ்கின், லியோ படத்திலும் வில்லனாக இருப்பார் என கணிக்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த நிலையில், மிஸ்கினின் கதாபாத்திரம் காஷ்மீரில் படமாக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது லியோ படத்தை பற்றியும், தான் அடுத்து நடிக்க உள்ள படங்கள் பற்றியும் அவ்வப்போது பேட்டிகளில் மிஸ்கின் பேசி வருகிறார்.

Also Read: இமேஜ் பார்க்காமல் வாயை புண்ணாக்கி கொண்ட 5 பிரபலங்கள்.. விஷாலை பொறுக்கியாக்கிய மிஸ்கின்

இதனிடையே தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க மிஸ்கின் திட்டம் போட்டு வருகிறாராம். இதற்காக பிரபல வில்லன் நடிகரை மிஸ்கின் தேர்ந்தெடுத்தது தான் ஆச்சரியமாக உள்ளது. அந்த வகையில் இவர் இயக்கிய பிசாசு 2 படத்தில் நடித்த வில்லன் நடிகரை வைத்து தான் தனது அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

இயக்குனர் மிஸ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஆண்ட்ரியா ஆடை இல்லாமல் சில காட்சிகளில் நடித்துள்ள நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து வியந்ததாக பலமுறை மிஸ்கின் கூறியுள்ளார்.

Also Read: நக்கல் அடித்து மனதை காயப்படுத்தும் 5 இயக்குனர்கள்.. சக நடிகர்களை கலாய்த்து தள்ளும் மிஸ்கின்

இதனிடையே தான் அடுத்து இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து இயக்கவுள்ளதாக மிஸ்கின் கூறியுள்ளது தான் தற்போது வேடிக்கையாக உள்ளது. காரணம் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வந்த காலத்தில் திடீரென வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததும், ஹீரோ இமேஜ் போய்விடுமோ என்ற எந்த பயமும் இல்லாமல் கமிட்டானார். அப்படி இவர் வில்லனாக நடித்த விக்ரம் வேதா, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களின் மூலமாக தற்போது ஜவான் படம் வரை வில்லன் கதாபாத்திரத்தில் தான் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இவர் கடைசியாக போலீஸ் கதாபாத்திரத்தில் டி.எஸ்.பி. படத்தில் ஹீரோவாக நடித்த நிலையில், அந்த படம் வந்த தடமே தெரியாமல் தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டது. இதனிடையே இவரை நம்பி படம் எடுக்க ஆசைப்படும் மிஷ்கினின் நிலையை கண்டு கோலிவுட் வட்டாரத்தில் வேடிக்கையாக பார்த்து வருகின்றனர். மேலும் இப்படத்தை கலைப்புலி எஸ். தானு தயாரிக்கப்போவதாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

Also Read: எல்லோருக்கும் விரோதியாய் மாறும் விஜய் சேதுபதி.. உச்சக்கட்ட கடுப்பில் இருக்கும் தயாரிப்பாளர்

Trending News