வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோ படத்தால் மிஸ்கினுக்கு எகுறும் சம்பளம்.. ஒரு நாள் சம்பளத்தை கேட்டு வாயை பிளந்த திரையுலகம்

அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் படங்களில் நடிப்பது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ரசிகர்களும் இவர்களது நடிப்பை சற்று அதிகமாகவே ரசித்து வரவேற்த்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்கள் பலர் படங்களில் நடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். உதாரணமாக கௌதம் வாசுதேவ் மேனன், பிரதீப் ரங்கநாதன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் இயக்குனர் மிஸ்கினும் களமிறங்கியுள்ளார். இயக்குனர் மிஸ்கினின் படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது எனலாம். நேர்த்தியான கதைக்களம், விறுவிறுப்பான காட்சிகள், சமூகத்திற்கு தேவையான விஷயங்கள் என பல கலவைகளை கொண்டு இவர் படங்களை இயக்குவார். இவரது இயக்கத்தில் பிசாசு 2 படம் உருவாகியுள்ள நிலையில், இப்படம் எப்போது ரிலீஸாகுமென ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: தளபதி 67ன் அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்.. சுடச்சுட அப்டேட் கொடுத்த இயக்குனர் மிஸ்கின்

விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியாகி திகிலூட்டியது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் இன்னும் வெளியாகாத நிலையில், மிஸ்கின் தற்போது படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். 2021 ஆம் ஆண்டு ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் திரைப்படத்தில் மிஸ்கின் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யின் 67ஆவது படமான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான யூத் திரைப்படத்தை மிஸ்கின் இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்பு 21 வருடங்கள் கழித்து விஜய்யுடன் மிஸ்கின் நடிக்க இணைந்துள்ளார். இந்நிலையில் மிஸ்கின் லியோ படத்திற்காக வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: மொத்தமாக சுத்தலில் விட்ட லோகேஷின் LCU.. போதை, தங்க கடத்தல் ரோலக்ஸ்-க்கு தண்ணி காட்ட வரும் லியோ

லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகிறது. இந்நிலையில் இயக்குனர் மிஸ்கினின் நடிப்புக்காகவே அவருக்கு ஒரு நாள் சம்பளமாக 10 லட்சம் ரூபாய் வரை தயாரிப்பாளர்கள் வாரி வழங்குவார்கள்.

தற்போது லியோ படத்தில் நடிக்க மிஸ்கினுக்கு 15 லட்சம் ரூபாய் ஒரு நாள் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். மேலும் இயக்குனர் மிஸ்கின் இப்படத்தில் மும்முரமாக நடிக்க உள்ள நிலையில், சில வருடங்கள் டைரெக்ஷனை ஒதுக்கி வைக்கலாம் என பிளான் செய்து வருகிறாராம். மிஸ்கினின் நடிப்பு லியோ படத்தில் பெருமளவில் பேசப்பட்டால், கட்டாயம் இவரின் சம்பளம் மேலும் மேலும் உயரும் என்பதில் சந்தேகமே இல்லை.

Also Read: லியோ பட ப்ரோமோவை பார்த்து விரக்தியில் அஜித்.. விபரீத முடிவு எடுத்த AK

Trending News