திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

மாயா, பூர்ணிமாவுக்குள் விழுந்த விரிசல்.. எதிரெதிர் துருவமாக மாறப்போகும் Bully Gang

Biggboss 7: நாங்க நகமும், சதையும் மாதிரி என அலப்பறை செய்து வந்த மாயா, பூர்ணிமாவுக்குள் இப்போது விரிசல் ஒன்று உருவாகி இருக்கிறது. இப்பொழுது சிறு பொறியாக இருக்கும் இந்த பிரச்சனை இன்னும் சில தினங்களில் காட்டுத் தீயாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.

அந்த அளவுக்கு அவர்களுக்கே தெரியாமல் உரசலை உருவாக்கி விட்டார் விஷ்ணு. நேற்றைய பிக்பாஸ் எபிசோடை பொறுத்தவரையில் அவர் பூர்ணிமாவோடு நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதில் பூர்ணிமா விஷ்ணுவை கவிழ்ப்பார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். அதுதான் மாயாவின் திட்டமும் கூட.

ஆனால் அது அவருக்கே ஆப்பாக முடிந்து விட்டது. அதுமட்டுமின்றி விஷ்ணு மாயாவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட போவதாக ஒரு குறிப்பையும் கொடுத்திருக்கிறார். அதன் விளைவு தான் மாயா, பூர்ணிமா இருவரும் ஒருவருக்கொருவர் செய்த விவாதம். அதில் மாயா தினேஷுக்கும் பூர்ணிமா விஷ்ணுவுக்கும் சப்போர்ட்டாக மாற தொடங்கியுள்ளனர்.

Also read: இவரா, அவரா வெளியேறப் போவது யாரு.? கடைசி நேரம் வரை ஆட்டம் காட்டும் பிக்பாஸ்

இதுதான் இவர்களின் முதல் விரிசல். இது வரும் வாரங்களில் பெரிய அளவில் எதிரொலிக்கும். அது மட்டுமல்லாமல் ஒரு உரையில் இரண்டு கத்தியாக இருந்த இவர்கள் தற்போது எதிர எதிர் துருவங்களாகவும் மாறி உள்ளனர். அதை தொடர்ந்து பிக்பாசின் ஆட்டமும் வேற போக்கில் சூடு பிடிக்க உள்ளது.

மேலும் இப்போது டம்மியான போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து வர இருக்கும் டாஸ்க்குகளும் கடுமையாக கொடுக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில் மாயா சிறப்பான யுக்தியை கையாண்டால் மட்டுமே தான் நினைத்ததை சாதிக்க முடியும் என்ற நிலையில் உள்ளார்.

Also read: கோர்த்து விடுவோம் அடிச்சுகிட்டு சாவட்டும்.. மொத்தமாக ஆப்படிக்க கோதாவில் குதித்த பிக்பாஸ் ராஜமாதா

Trending News