புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்கப்பெண்ணில் மித்ராவை சீண்டும் மகேஷ்.. கருணாகரனால் அன்பு, ஆனந்திக்கு வர போகும் சிக்கல்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில், ஒரு சில வாரங்களாக மித்ராவை சைலன் மோடில் வைத்திருந்தார்கள். இந்த வாரம் தான் மீண்டும் இந்த சீரியலில் வில்லி ஒரு கேரக்டர் இருக்கிறது என்று இயக்குனருக்கு ஞாபகம் வந்திருக்கிறது போல.

அதனால் இந்த வாரம் முழுக்க மித்ராவை சுற்றி தான் கதை ஓடுகிறது. நந்தாவை வேலைக்கு சேர்த்தது மித்ரா மற்றும் கருணாகரன் என்பதை மகேஷ் கண்டுபிடித்து விட்டான். இதனால் கருணாகரனின் பல்லை பிடுங்கி பெரிய பொறுப்புகளை அன்புக்கு கொடுத்திருக்கிறான்.

மித்ராவை சீண்டும் மகேஷ்

அதே நேரத்தில் மித்ராவை சஸ்பெண்ட் செய்து வைத்திருக்கிறான். மகேஷ் ஆனந்திக்காக இவ்வளவு தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தில், ஆனந்தியின் நெருக்கம் முழுக்க அன்பு விடம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

அன்பு கூட அவன் தான் அழகன் என்று ஆனந்தியிடம் சொல்வதற்கு ரொம்பவே துடித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் மகேஷ் செய்த இந்த வேலைகளால் கண்டிப்பாக மித்ரா அடுத்து ஆனந்திக்கு பெரிய ஆப்பாக வைக்கப் போகிறாள்.

அது மட்டும் இல்லாமல் கருணாகரன் பல்லை பிடுங்கிய பாம்பாக கம்பெனிக்குள் இருக்கிறான். அன்பு எப்போ சிக்குவான் எதில் மாட்டி விடலாம் என காத்துக் கொண்டிருக்கிறான். இன்றைய புரோமோவில் மகேஷிடம் மித்ரா வேலைக்கு வராமல், கம்பெனி வேலைகள் எல்லாம் அப்படியே தடைப்பட்டு விட்டது என்று கருணாகரன் சொல்கிறான்.

ஆனால் மகேஷ் அந்த எதுவுமே கேட்பதாய் இல்லை. இதில் இருந்து சில நாட்களுக்கு மித்ராவை ஆபீஸுக்குள் மகேஷ் வர விட மாட்டான் என்பது நன்றாக தெரிகிறது. இருந்தாலும் மித்ரா வெளியில் இருந்து ஆனந்திக்கு தொந்தரவு கொடுப்பது உறுதி. ஏற்கனவே காண்டில் இருக்கும் மித்ராவின் கோபத்தை முழுக்க சீண்டி பார்த்திருக்கிறான் மகேஷ்.

சிங்கப்பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News