வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிங்கப்பெண்ணில் அழகன் யாரென்று கண்டுபிடித்த மித்ரா.. ருத்ர தாண்டவம் ஆட காத்திருக்கும் மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நேற்றைய எபிசோடில் மொட்டை மாடியில் அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் கட்டிப்பிடித்தபடி நின்றிருப்பதை மகேஷ் நேரில் பார்க்கிறான்.

இருந்தாலும் மகேஷுக்கு அவர்கள் இரண்டு பேர் மீதும் துளி அளவு கூட கோபம் வரவில்லை. அன்பு வீட்டில் தீபாவளி பலகாரம் சாப்பிட்டுவிட்டு மகேஷ் கிளம்புகிறான். யாழினியின் தோழியாக வந்திருக்கும் சைலா பானுவை மகேசின் காரில் அனுப்பி வைப்பது போல் அன்புவின் அம்மாவை ஏமாற்ற ஒரு டிராமா நடத்துகிறார்கள்.

அதன் பின்னர் அன்பு ஆனந்தியை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறான். கருணாகரன் கம்பெனி ஸ்டாக் பைலை மித்ராவிடம் காட்டிய கையெழுத்து கேட்க வருகிறான். அதில் மற்ற பேப்பர்களுடன் அன்பு எழுதிய லீவ் லெட்டர் ஒன்றும் இருக்கிறது.

ருத்ர தாண்டவம் ஆட காத்திருக்கும் மகேஷ்

முதலில் அதை அசால்ட்டாக எடுத்துக் கொண்ட மித்ரா அதன் பின்னர் திடீரென ஏதோ ஞாபகம் வந்தது போல் தன்னுடைய பைலை எடுக்கிறாள். அதில் நந்தா போலி அழகனாக நடித்துக் கொண்டிருக்கும் போது அன்பு எழுதிய கடிதம் ஒன்று ஆனந்தியிடம் போகாமல் மித்ராவிடம் சிக்கி இருக்கும்.

அந்த கடிதம் தற்போது மித்ராவின் கவனத்திற்கு வருகிறது. இரண்டு லட்டரையும் ஒன்றாக பார்க்கும் பொழுது கையெழுத்து ஒரே மாதிரி இருக்கிறது. இதனால் மித்ராவுக்கு சந்தேகம் வந்து கருணாகரனிடம் ஏன் ஒரு வேலை அன்பு அழகனாக இருக்கக் கூடாது என கேட்கிறாள்.

அதற்கு கருணாகரன் அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்லி விடுகிறான். எது எப்படியோ இந்த கையெழுத்து ஒற்றுமையை வைத்து நான் வேறொரு திட்டம் வைத்திருக்கிறேன் என மித்ரா சொல்கிறாள். சொன்னது போலவே ஒரு பார்சல் உடன் மகேஷ் வீட்டுக்கு போகிறாள்.

மகேஷ் அம்மாவிடம் அன்பு தான் அழகன் என மகேஷை நம்ப வைக்க போகிறேன் என தன்னுடைய திட்டத்தை சொல்கிறாள். ஏற்கனவே அழகன் இருப்பதால் தான் ஆனந்தி தன்னுடைய காதலை புரிந்து கொள்ள மறுக்கிறாள் என மகேஷுக்கு கோபம் இருப்பதால், அழகன் அன்பு தான் என தெரிந்தால் பெரிய பிரளயமே ஏற்படும் என மித்ரா பெரிய அளவில் நம்புகிறாள்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அழகன் என்ற பெயரில் ஆனந்திக்கு பார்சல் வந்திருப்பதாக வாட்ச்மேன் மகேஷிடம் சொல்கிறார். அந்தப் பார்சல் ஆனந்தி கைக்கு போனதும் ஆனந்தி ரொம்பவே சந்தோஷப்படுகிறாள்.

அந்த நேரம் மகேஷ் அந்த இடத்திற்கு வருகிறான். கண்டிப்பாக மகேஷ் தன்னுடைய பெரிய கோபத்தை ஆனந்தியிடம் காட்டப் போவது உறுதி. எது எப்படியோ தெரியாத்தனமாக திட்டம் போடுகிறேன் என்ற பெயரில் அன்பு தான் அழகன் என்பதை மித்ரா மூலம் தெரிவிப்பது ஒரு வகையில் சந்தோசம் தான்.

Trending News