சிங்கப்பெண்ணில் அம்பலமாகும் ஆனந்தியின் கர்ப்பம்.. தொக்காக தூக்கும் மித்ரா, அழுது புலம்பும் லலிதா!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியின் கர்ப்பம் யாருக்குத் தெரியக்கூடாது அவங்களுக்கே தெரிந்து விடுவது தான் அடுத்த கட்ட கதையின் நகர்வு.

தன்னுடைய பிரக்னன்சி அறிக்கையை யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைத்து விட என்னை அந்த தாளை கிழித்து வீசுகிறாள் ஆனந்தி. ஆனால் அவள் குப்பைத்தொட்டியில் போட்ட பேப்பரை பார்த்த மித்ரா ஆனந்தியின் கர்ப்பத்தை பற்றி தெரிந்து கொள்கிறாள்.

ஆனந்திக்கு தான் அவளுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் எனத் தெரியாது. ஆனால் மித்ராவுக்கு மகேஷ் தான் இதற்கு காரணம் என்பதை தெள்ளத் தெளிவாக தெரியும்.

அம்பலமாகும் ஆனந்தியின் கர்ப்பம்

ஆனந்தி கர்ப்பமாக இருப்பதால் இனி மகேஷை நாம் திருமணம் செய்து கொள்ளவே வாய்ப்பு இல்லையே என எண்ணி அழுது கதறுகிறாள்.

ஆனந்தியின் கர்ப்பத்தை வைத்து மித்ரா அடுத்த கட்டத்தை ஆரம்பிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் இந்த கர்ப்பத்தை கலைத்து இந்த விஷயத்தை ஒண்ணுமே இல்லாமல் ஆக்கவும் மித்ரா துணிவாள்.

அதே நேரத்தில் அன்புவின் அம்மா லலிதா நேரடியாக ஹாஸ்டலுக்கு வந்து ஆனந்தியிடம் பேசுகிறார். மேலும் ஆனந்திக்கு என்ன பிரச்சனை என்பதை விரைவில் நீ வெளியே சொல்லித்தான் ஆக வேண்டும் என்றும் சொல்லிவிட்டு போகிறார்.

ஆனந்தி தன்னுடைய வருங்கால மாமியாரிடம் ஆவது தன்னுடைய பிரச்சனையை பற்றி சொல்கிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்