புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மித்ராவால் அன்புக்கு வர போகும் பெரிய ஆபத்து.. பிரச்சனையில் சிக்கி கொள்ளும் ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் அன்பு மற்றும் ஆனந்திக்கு அடுத்தடுத்து பிரச்சனை ஏற்பட இருக்கிறது. ஏற்கனவே மகேஷ் மித்ராவை சஸ்பெண்ட் செய்த கோபம் அவளுக்கு அதிக அளவில் இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் ஆனந்தியை ஹாஸ்டலில் வந்த பார்ப்பது, வேறு ஹாஸ்டலுக்கு மாற்றப் போகிறேன் என மகேஷ் பேசியது எல்லாமே மித்ராவுக்கு ஆனந்தி மீதான கோபத்தை அதிகரித்திருக்கிறது. நந்தாவை வேலைக்கு சேர்த்த கோபத்தில் கருணாகரனையும் பல்லை பிடுங்கிய பாம்பாக மாற்றி விட்டான் மகேஷ்.

கம்பெனியில் முக்கியமான முடிவுகளை இனி அன்புவும் எடுக்கலாம் என்று மகேஷ் சொல்லிவிட்டான். இதனால் கருணாகரன் மற்றும் மித்ரா இருவரும் இணைந்து அன்புக்கு எதிராக சதி திட்டம் தீட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

பிரச்சனையில் சிக்கி கொள்ளும் ஆனந்தி

மகேஷ் வாயாலேயே அன்புவை கம்பெனியை விட்டு வெளியேற்ற வைக்க அடுத்த கட்டத்தை போட்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அன்புவின் அப்பா திதி காக கம்பெனியில் வேலை செய்யும் எல்லோரையும் அன்பு வீட்டிற்கு சாப்பிட அழைக்கிறான்.

ஏற்கனவே ஆனந்தி மற்றும் அன்புவின் அம்மாவுக்கு ஏழாம் பொருத்தம் எட்டாம் பொருத்தம் என்பதால் ஆனந்தி அன்பு வீட்டிற்கு போக தயங்குகிறாள். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி மற்றும் அன்புவின் அம்மா எதிர்பாராத சூழலில் சந்திப்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

ஆனந்தியை பார்த்துவிட்டு அன்புவின் அம்மா எப்படி நடந்து கொள்கிறார் என்பது இன்றைய எபிசோடில் தான் தெரியும்.

சிங்கப்பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News