Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக அன்புவின் அம்மா உடல் நலம் சரியாகி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.
இனி அடுத்து அன்பு- ஆனந்தி- மகேஷ் காதல் கண்ணாமூச்சி கண்டண்டு தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஹாஸ்டல் வார்டன் பற்றிய ரகசியத்தை வெளிக்கொண்டுவரும் எபிசோடுகள் அடுத்தடுத்து வரப்போகிறது.
வார்டன் தன்னுடைய கபோர்ட்டில் ஒரு புடவை மட்டும் குழந்தைகள் விளையாடும் கிளுகிளுப்பை வைத்து பார்த்துக் கொண்டிருப்பார்.
மித்ரா கையில் கிடைத்த ஆதாரம்
இதை பார்த்த ஆனந்தி இது குறித்து தன்னுடைய தோழிகளிடம் பேசிக் கொண்டிருந்தாள். இதை மித்ரா மறைந்திருந்து கேட்டுவிட்டாள்.
வார்டன் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொண்டு வார்டன் மற்றும் ஆனந்தியை பழிவாங்க போகிறேன் என மித்ரா கூறி இருந்தாள்.
அவள் திட்டபடியே கபோர்ட்டிலிருந்து அந்த புடவை மற்றும் கிளுகிளுப்பை எடுத்து விட்டாள். வார்டன் ஹாஸ்டல் முழுக்க தன்னுடைய முக்கியமான பொருள் காணாமல் போய்விட்டதாக தேடிக் கொண்டே அழுது கொண்டிருக்கிறார்.
இது ஆனந்தியை ரொம்பவே கஷ்டப்படுத்தி விடுகிறது. சீரியல் தொடங்கியதில் இருந்து வார்டன் தான் மகேஷ் அம்மா என்று ட்விஸ்ட் வைத்துக் கொண்டே இருந்தார் இயக்குனர்.
ஆனால் இவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது ஃப்ளாஷ் பேக் வந்தால் தான் தெரியும். அதற்கான நேரம் தான் தற்போது நெருங்கி விட்டது.
அது மட்டும் இல்லாமல் மகேஷுக்கு ஒரு அம்மாவாக ஆனந்தியை அவனுடன் சேர்த்து வைப்பேன் என முடிவெடுத்து இருக்கிறார் வார்டன்.
இதனால் அன்பு மற்றும் ஆனந்தி இருவரின் காதல் வாழ்க்கையும் தலைகீழாக மாற இருப்பது உறுதி.