திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

சிங்கப்பெண்ணில், ஆனந்தியின் குடும்பத்திடம் ஏகத்துக்கும் வழியும் மகேஷ்.. சதி திட்டத்துடன் காத்திருக்கும் மித்ரா

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் மகேஷின் காதல் சேட்டைகள் சகிக்கவில்லை. கொஞ்ச நாளாக மித்ரா சைலன்டாக இருந்த உடன் அப்படி ஒரு கேரக்டர் இருந்ததையே மக்கள் மறந்திருப்பார்கள்.

இதனால் இந்த வாரம் மீண்டும் மித்ரா ஃபார்முக்கு வருகிறாள். ஏற்கனவே ஆனந்தியின் குடும்பம் ஹாஸ்டலுக்கு வந்தது மித்ராவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதிலும் மகேஷ் தன்னுடைய சொந்த காரில் அவர்களை கூட்டிக்கொண்டு வந்தது மித்ராவுக்கு எரிச்சலாக இருந்தது.

போதாத குறைக்கு தன்னுடைய குடும்பத்தை நேரில் பார்த்ததும் ஆனந்தி சந்தோஷமாக இருப்பது மித்ரா மற்றும் அவளுடைய தோழிகளுக்கு கடுப்பாக இருக்கிறது. எப்படியாவது ஆனந்தியின் வீட்டாரிடம் தன்னுடைய காதலை தெரிவித்து விட வேண்டும் என அன்பு எவ்வளவு திட்டம் போட்டான்.

ஆனால் மகேஷ் அசால்ட் ஆக கம்பெனியில் ஆள் இல்லை நீ உடனே கம்பெனிக்கு போ என்று சொல்லி அன்புவை அனுப்பி வைத்து விட்டான். அது மட்டும் இல்லாமல் ஆனந்தி மற்றும் அவனுடைய குடும்பத்தை ஊரை சுற்றி காட்டுவது என தற்போது முடிவு செய்து இருக்கிறான் மகேஷ்.

இதற்கு தான் இப்போது மொத்தமாக ஆப்பு வைத்திருக்கிறாள் மித்ரா. மகேஷ் போடும் ஆட்டத்தை அவனின் அம்மாவிடமே நேரடியாக போய் மித்ரா சொல்கிறாள். மகேஷ் அப்பா சராசரியான கேரக்டராக இருந்தாலும், அவனுடைய அம்மாவுக்கு அந்த பணக்காரத் அதிகமாகவே இருக்கிறது.

கண்டிப்பாக ஆனந்தியின் குடும்பத்துடன் மகேஷ் சுற்றுவதை அவன் அம்மா விரும்ப மாட்டார். எனவே மகேஷின் அம்மா மூலம் அவனுக்கு கடிவாளம் போடும் திட்டத்தை தொடங்க இருக்கிறாள் மித்ரா.

சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்

Trending News