ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சிங்கப்பெண்ணில் மித்ராவுக்கு சாதகமான சூழ்நிலை.. ஆனந்தி வயித்துல வளர குழந்தை தெய்வ குழந்தையா இருக்குமோ!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது.

ஆனந்தியை ஹவுஸ் கீப்பிங் வேலையில் இருந்து மாற்றி டெய்லர் ஆக்கி விட அன்பு மற்றும் மகேஷ் முடிவெடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் இது கருணாகரன் மற்றும் மித்ராவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனந்தி டைலராக உட்கார்ந்து விட்டால் கம்பெனியின் நிரந்தர ஊழியராக மாறிவிடுவாள் என்பதால் மித்ரா பயப்படுகிறாள்.

இதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்று உஷா உடன் மூன்று டிஷர்ட் தைப்பதற்கு ஆனந்திக்கு போட்டி வைக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் உஷா முன்னேறியது போல் இருந்தாலும் கடைசியில் ஆனந்தி இந்த போட்டியில் ஜெயித்து விடுகிறாள்.

மித்ராவுக்கு சாதகமான சூழ்நிலை

என்னதான் முதலில் ஆனந்தி தைத்து முடித்தாலும் குவாலிட்டி செக்கிங் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும் என கருணாகரன் சொல்கிறார்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி இந்த குவாலிட்டி செக்கிங்கிலும் ஜெயித்தது போல் காட்டப்படுகிறது உடனே கருணாகரன் மித்ராவிடம் நீங்க ஆனந்தியுடன் தானே ஹாஸ்டலில் தங்கி இருக்கீங்க.

எப்படியாவது ஆனந்தியை நாளைக்கு ஆபீசுக்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்கிறார். மித்ராவும் அந்த திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றுகிறாள்.

ஆனந்தி பாத்ரூமில் குளிக்க போன சமயத்தில் அந்த ஹாலில் சோப்பு நுரையாலான தண்ணியை அவளும் அவளுடைய தோழிகளும் ஊதுகிறார்கள்.

ஆனந்தியின் பாத்ரூம் கதவையும் தட்டி விட்டு சென்று விடுகிறார்கள்.

ஆனந்தி வெளியே வரவும் சோப்பு தண்ணீர் வழுக்கி கீழே விழுந்து விடுகிறாள் ஆனந்த் என் கை மற்றும் வயிற்றுப் பகுதியில் அடிபட்டு விடுகிறது.

கையில் அடிபட்டு இருப்பதால் ஆனந்தியால் மெஷினில் உட்கார்ந்து தைக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சீரியலில் இயக்குனர் அவ்வப்போது ஆனந்தி கர்ப்பமாக இருப்பது போல் டிராக் ஒன்றை கொண்டு வருகிறார். ஆனந்தி திருடர்களிடம் சண்டை போட்டு நகையை பறிக்கும்போது மண்ணுக்குள் புதைப்பட்டது.

காயத்ரியை காப்பாற்ற அடிதடி சண்டை போட்டது. மற்றும் அன்புவின் அம்மாவால் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கியது என அவளுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டது.

இப்போது வழுக்கி விழுந்து வயிற்றில் பலமாக அடிபட்டு இருக்கிறது. எப்படி பார்த்தாலும் இதில் ஏதாவது ஒன்றில் அந்த குழந்தை கலைந்து இருக்க வேண்டும்.

இது எல்லாத்தையும் தாங்குகிறது என்றால் கண்டிப்பாக அது தெய்வக் குழந்தையாக இருக்கும் என சீரியல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Trending News