வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நோ சூடு, நோ சொரணை.. மாயாவுக்கு ஜால்ரா தட்டும் மிக்சர் பார்ட்டி

Biggboss 7: அப்பாடா ஒருவழியா பிக்பாஸ் முடிய போகுது. இதுதான் ஒட்டு மொத்த ஆடியன்ஸின் தற்போதைய மைண்ட் வாய்ஸ். அந்த அளவுக்கு இந்த சீசன் பார்ப்பவர்களுக்கு மன உளைச்சலை மட்டும் தான் கொடுத்திருக்கிறது.

முழுக்க முழுக்க வன்மம் மட்டுமே நிறைந்திருந்த இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஆனால் யாருக்கு கிடைத்தாலும் அது நிச்சயம் ஏற்புடையது கிடையாது. இதில் மாயாவை டைட்டில் வின்னர் ஆக்கும் முயற்சியும் சைலன்டாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் எவிக்டான போட்டியாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். நேற்று வினுஷா, அனன்யா, அக்ஷயா வந்த நிலையில் இன்று சரவண விக்ரம் வந்துள்ளார். ஆனால் இவர் ஏன் வந்தார் என்று நினைக்கும் அளவுக்கு இருக்கிறது அவரின் அலப்பறை.

Also read: உன் போதைக்கு நா ஊறுகாவா.? அர்ச்சனாவின் சாயத்தை வெளுத்த கண்ணம்மா

மாயா கூட்டணியின் முக்கிய உறுப்பினராக இருந்த இவரை தலைவி முதுகில் குத்தியதை நாம் பார்த்தோம். அதிலும் இவர் வீட்டை விட்டு வெளியேறும் போது மாயா நடந்து கொண்டது கடும் விமர்சனமானது. ஆனாலும் சரவண விக்ரம் திருந்தவில்லை.

அதன்படி தற்போது வீட்டுக்குள் வந்ததும் மாயாவுடன் அவர் பேசிக் கொண்டிருக்கும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் மற்றவர்களைப் பற்றி கமெண்ட் கொடுக்கிறார். அதிலும் மணி பற்றி அவர் சொன்ன விஷயம் ரசிகர்களை கடுப்பேற்றி இருக்கிறது.

பொதுவாக வெளியில் சென்று வீடியோக்களை பார்த்து விட்டு வருபவர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் ஜாக்கிரதையாக இருப்பார்கள். ஆனால் விக்ரம் மீண்டும் மாயாவுக்கு ஜால்ரா தட்டுவது இவர் திருந்தவே மாட்டார் என நினைக்க வைத்திருக்கிறது.

Also read: பிக் பாஸ்க்கு பின் வெளியில் தலை காட்ட முடியாத விக்ரமன்.. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு

Trending News