வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மிக்சர் விக்ரம் தான் தப்பிச்சான்னு பாத்தா, மிக்சர் குடோனும் தப்பிக்கிது.. நல்லா உருட்டும் பிக்பாஸ் நாமினேஷன்

Biggboss 7 Nomination: இந்த ஷோ எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது தான் பிக்பாஸ் ஆடியன்ஸின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும். அந்த அளவுக்கு விஷயங்கள் எல்லாம் நடந்து வருகிறது. அதிலும் மக்களால் வெளியே துரத்தப்பட்ட மூன்று பேர் மீண்டும் வருவது சிறு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் இந்த குசும்புக்கார பிக்பாஸ் கடைசியில் பிம்பிலிக்கா பிலாப்பி என ஷாக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் நாம் ஒன்று எதிர்பார்த்தால் அது ஒன்று நடக்கிறது என்ற கதையாக தான் பிக்பாஸ் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதில் நேற்றைய எபிசோடில் எட்டு போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி இருந்தனர். ஆனால் இந்த ஜோவிகா மட்டும் தொடர்ந்து தப்பித்து வருவது எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. ஏனென்றால் பிக்பாஸ் வீட்டை பொருத்தவரையில் ஒன்றும் தெரியாத மக்கு என்று தான் இவரை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Also read: அர்ச்சனாவின் கேம்க்கு பின்னாடி குருநாதரின் மாஸ்டர் பிளான்.. மைண்ட் வாய்ஸ்ல உளறிய தினேஷ், மணி

அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது இவருக்கு பாடவும் வரல, ஆடவும் வரல, மரியாதையும் வரல. அதேபோன்று மத்தவங்கள மதிக்கவும் தெரியாது. ஆனால் சூனியக்கார கும்பலோடு சேர்ந்து வில்லத்தனம் மட்டும் செய்ய தெரியும். அதிலும் பிரதிப் வெளியேறியதற்கு பிறகு வந்த வாரத்தில் இவர் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது.

இதுவே ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்தது. அதை தொடர்ந்து கமலின் சில அறிவுரைகளால் இவர் இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். இருப்பினும் இந்த வாரம் நாமினேஷனில் இரண்டு ஓட்டுகளை வாங்கிய இவர் தப்பித்ததை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏனென்றால் அதே இரண்டு ஓட்டுகளை வாங்கிய ரவீனா நாமினேஷன் பட்டியலில் இருக்கிறார். அப்படி பார்த்தால் இவர் பிக்பாஸால் காப்பாற்றப்படுகிறாரா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆக மொத்தம் மிக்சர் விக்ரம் தான் தப்பிச்சாருன்னு பார்த்தா இந்த மிக்சர் குடோனும் தப்பித்து விட்டது.

Also read: பிக்பாஸ் நாமினேஷனில் சிக்கிய 8 போட்டியாளர்கள்.. மாட்டுனியா, வெறியோடு காத்திருக்கும் ஆடியன்ஸ்

Trending News