இந்த ஊரடங்கு நிலை குறையுமா மேலும் நீடிக்குமா என்ற விவாதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதுதொடர்பாக ஸ்டாலினும் தினமும் மக்களிடையே பேசிக்கொண்டே இருக்கிறார். அதற்கான வீடியோவும் வெளி வந்து கொண்டே இருக்கிறது.
சரி இப்பொழுது ஊரே அடங்கி இருக்கு நிலையில் முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்றால் அதுவும் இனிமேல் கொஞ்சம் கஷ்டம் தான். இதனை மனதில் வைத்து தமிழக அரசு சில முடிவுகளை எடுக்க உள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே தடுப்பூசிகள் கையிருப்பு இருந்தவரை போடப்பட்டுள்ளது இனிமேல் தடுப்பூசி வரவேண்டும் அதன் பின்புதான் தடுப்பூசி போடுவதற்கான வேலைகள் தொடங்கும் என கூறுகிறார்கள்.
இந்நிலையில் ஊரடங்கு மேலும் நீடிக்குமா என்ற கேள்விக்கு ஸ்டாலின் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆம் கொரோனா பாதிப்பு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் அதிகமாக இருந்தாலும் தமிழகத்தில் மிக அதிகமாக குறைந்துகொண்டே வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு மக்கள் செயல்பட்டால் ஊரடங்கு நீடிக்காது என சொல்லிவிட்டார் ஸ்டாலின். மேலும் சில கட்டுப்பாடுகள் மட்டுமே வைத்து ஜூன் 7ஆம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு இருக்காது என கூறுகிறார்கள்.