கடந்த ஓராண்டில் மட்டும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த வேதனையை சொல்லி மாளாது. கொரோனா வைரஸ் மூலம் இறந்தவர்களுக்கு ஆறதலாக இறந்து போன குடும்பங்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப் போவதாக தமிழக அரசு திடீரென அறிவித்து அரசானை வெளியிட்டுள்ளது.
பணத்தால் கொரோனா மரணங்களை சரிசெய்ய முடியாது என்றாலும் வறுமையில் வாடும் பல குடும்பங்களுக்கு இந்த பணம் ஒரு ஆறுதலை கண்டிப்பாக கொடுக்கும். போன வருடம் 2021 நவம்பர் 24 வரை இறந்துபோன குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து இதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு 182 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனால் பயன்பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 413. இந்தியாவிலேயே இந்த செயல் மிக முக்கியமாக கருதப்படுகிறது. மற்ற மாநிலங்களை பொருத்தவரையில் தமிழக அரசை இது சற்று திரும்பி பார்க்க வைக்கும்.
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திடீர் அறிவிப்பினால் எதிர்க்கட்சிகள் சற்று கலங்கி தான் போய் உள்ளனர். இதிலும் ஏதேனும் குறைகள் இருக்குமா என்றும் ஆராய தொடங்குவார்கள். அதன்படி குறைகள் வந்து சேரும்.
![dmk-stalin](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/03/dmk-stalin.jpg)
எது எப்படியோ இது உங்கள் அரசியல் அடித்துக் கொள்ளுங்கள் குறை சொல்லுங்கள் ஆனால் மக்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் நல்லது ஒன்று நடந்தால் போதும். ஏற்கனவே கொரோனா, கோவிட், மைக்ரான் என இப்படி பல துன்பங்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த செய்தி ஒரு நற்செயல் ஆகவே தோன்றுகிறது. விரைவில் நடந்தால் மிகவும் மகிழ்ச்சியே.