வியாழக்கிழமை, அக்டோபர் 17, 2024

மோடிக்கு மக்கள் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்.. சப்த நாடியும் அடங்கி பம்மி பதுங்கும் ஏழை தாயின் மகன்

Narendra Modi: ‘பேச்சா பேசுன, கொஞ்ச நஞ்ச பேச்சா பேசின’ என்று ஒரு பிரபலமான காமெடி டயலாக் இருக்கிறது. ஓவராக ஆட்டம் போட்டு, ஒன்னும் இல்லாமல் மண்ணைக் கவிய அவர்களுக்கு இந்த டயலாக்கை சொல்வதுண்டு. அது தற்போது நம்ம மோடிஜிக்கு சரியான நேரத்தில் பொருந்தி இருக்கிறது.

பெரும்பான்மை தொகுதிகளில் ஜெயித்து எங்களை விட்டா ஆளே இல்லை என ஒரு காலத்தில் பிஜேபி கட்சி ஆட்டமாக ஆடியது. ஆனால் இப்போதைய தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கே கூட்டணி கட்சிகளின் உதவி தேவைப்படும் அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.

சப்த நாடியும் அடங்கி பம்மி பதுங்கும் ஏழை தாயின் மகன்

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இல்லை என்றால் மோடி ஆட்சியை அமைக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. மக்களவைத் தொகுதி தேர்தல் ஆரம்பித்தபோது ஐந்து முறை தமிழ்நாடு வந்த மோடி திருவள்ளுவரில் இருந்து தொடங்கி எம்ஜிஆர் வரை புகழாரம் சூட்டினார்.

ஏப்ரல் 19 தேர்தல் முடிந்த பிறகு வடநாடு முழுக்க தன்னுடைய மத காழ்ப்புணர்ச்சியின் தீவிரத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தினார். என்ன இது இந்திய தேர்தல் முடிந்ததும் இப்படி பேச்சு மாறுகிறதே என மக்களுக்கு பெரிய ஏமாற்றம் இருந்தது.

அது மட்டும் இல்லாமல் ஒடிசா அரசு தமிழ்நாட்டைச் சேர்ந்த பினாமிகளால் ஆளப்படுகிறது என வெளிப்படையான குற்றச்சாட்டை வைத்தார் பிஜேபி அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி . ஆண்டவன் இருக்கிறான் குமாரு என்பதற்கு ஏற்ற மாதிரி ஆடிய ஆட்டத்துக்கு எல்லாம் ஆப்பு வைக்கும் மாதிரி எலக்சன் ரிசல்ட் வந்துவிட்டது.

கூட்டணி கட்சிகளும் ஒருமனதாக கூடி பிரதம மந்திரியாக மோடியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிந்ததும் மோடி முதன் முதலில் வாயை திறந்து சொன்ன வார்த்தை எல்லா மதமும் சம்மதம் என்பதுதான்.

நரேந்திர மோடி தான் இப்படி பேசுகிறாரா என எல்லோருக்குமே சந்தேகம் வரத்தான் செய்திருக்கும். இருக்காதா பின்னே, ராமருக்கு கோயில் கட்டி கோலாகலமாக கொண்டாடிய அயோதியிலேயே மோடிக்கு ஆப்படித்த பின்னாடி இப்படித்தானே பேசி ஆகணும்.

- Advertisement -spot_img

Trending News