திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய உள்ள படம் ருத்ர தாண்டவம். திரௌபதி படத்தில் நடித்த ரிஷி ரிச்சர்டு, சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா,ராதாரவி, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி ராமையா போன்ற பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்திய இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் மோகன்ஜி பேசும்போது என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் பாதிரியாராக உள்ளார், அவர் திரௌபதி படத்தை பார்த்துவிட்டு இந்தப் பட கதை எனக்கு கூறினார். திரௌபதி படம் வெளியாகி பல சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையில் ருத்ர தாண்டவம் திரைக்கு வருவதற்கு முன்பே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ருத்ர தாண்டவம் அக்டோபர் 2ஆம் தேதி திரையில் வெளியாகும் நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக்கை படக்குழு வெளியிட்டது. படத்தில் கும்பகோணம், மதுரையில் உள்ள சாத்தான்களை ஒழிக்க வேண்டும் என்றால் தாராளமாக நிதி கொடுங்கள் என்று மனோபாலா பேசும் வசனம் சர்ச்சைக்கு உள்ளானது.
கிறிஸ்துவ மத கூட்டங்களை நேரடியாக தாக்கி இவர் பேசிய காட்சி ருத்ர தாண்டவத்திற்கு எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசனம் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ்ஸை மறைமுகமாக குறிப்பிடுவது போல உள்ளதாகவும் விமர்சிக்கிறார்கள்.
2016 ஆம் ஆண்டு நடந்த மத போதக கூட்டத்தில் மதபோதகர் மோகன் சி லாசர்ஸ், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சாத்தான்களின் இருப்பிடம் அதிகமாக உள்ளது எனவும் தமிழகத்தில் கோயில்கள்தான் சாத்தான்களின் அரண்கள் என்று பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை பார்த்த பல இந்து அமைப்புகள் அவர் மீது புகார் கொடுத்தனர். அவரும் கைது செய்யப்பட்டார். இதனை மோகன்ஜி படமாக எடுத்துள்ளார் என சிலர் விமர்சித்து வருகின்றன.