தமிழ் சினிமாவில் சிறந்த ரீமேக் இயக்குனராக வலம் வந்த மோகன்ராஜா தனி ஒருவன் படத்தின் மூலம் ரீமேக் இல்லாமல் சொந்த கதையிலும் தன்னால் சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியும் என நிரூபித்தவர்.
இதுவரை தமிழில் மோகன் ராஜா எடுத்த அனைத்து படங்களுமே மினிமம் கேரண்டி படங்களாக அமைந்தது. கேவலமாக படம் எடுத்துள்ளார் என்று சொல்லும் அளவுக்கு எந்த படமும் அவர் கொடுக்கவில்லை.
அதுமட்டுமில்லாமல் அவருடைய தம்பி ஜெயம் ரவி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை அடைவதற்கு உறுதுணையாக இருந்ததும் மோகன் ராஜாவின் படங்கள் தான். இவ்வளவு ஏன் தளபதி விஜய்யை வைத்து வேலாயுதம் என்ற சூப்பர்ஹிட் படத்தையும் கொடுத்துள்ளார்.
இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வெற்றியை சுவைத்துக் கொண்டிருந்த மோகன்ராஜா அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியை வைத்து ஒரு படத்தை இயக்கயிருந்தார்.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் தான். ரீமேக் படங்களை இயக்குவதில் வல்லவர் எனப் பெயரெடுத்த மோகன் ராஜாவை முதலில் படக்குழுவினர் ஒப்பந்தம் செய்தனர்.
தெலுங்குக்கு ஏற்றவாறு மோகன் ராஜா கதையில் செய்த சில மாற்றங்கள் சிரஞ்சீவியை கவரவில்லை போல. இதனால் அந்த படத்தை தயாரிக்கும் தன்னுடைய மகன் ராம் சரணிடம் சூப்பர் ரீமேக் இயக்குனர் என்று சொன்னீங்க, இவ்வளவு சுமாரா சீன் எழுதி இருக்காரே என்று வேறு இயக்குனரை தேர்வு செய்யலாமா என ஆலோசித்து வருகிறாராம். மோகன் ராஜா தெலுங்கிலும் சில படங்கள் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.