புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வெள்ளி விழா கண்ட மோகனின் 12 படங்கள்.. அந்தக் காலத்திலேயே ரஜினி, கமலை ஓரங்கட்டிய மனுஷன்

ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் படங்கள் திரையரங்குகளில் ஓடியதை விட நடிகர் மோகன் அவர்களின் திரைப்படங்கள் அதிக நாட்கள் திரையரங்குகளில் வெற்றி விழா கண்டன. பாலுமகேந்திரா இயக்கத்தில் கோகிலா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் இவருடைய திரைப்படங்கள் அந்த காலகட்டத்திலேயே 100 முதல் 300 நாட்கள் வரை ஓடி மிக பெரிய அளவிற்கு வெற்றியைப் பெற்றது.

நெஞ்சத்தை கிள்ளாதே: மகேந்திரன் இயக்கத்தில் மோகன், சுகாசினி, பிரதாப் எனப் பல முக்கியமான பிரபலங்கள் நடித்த திரைப்படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே. இப்படம் 300 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது தேசிய விருதும் வழங்கப்பட்டது.

கிளிஞ்சல்கள்: 1982-இல் துறை அவர்கள் இயக்கிய கிளிஞ்சல்கள் படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், 150 நாட்கள் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அரசன்: 1982-இல் வெளியான சுந்தர்ராஜன் இயக்கத்தில் அரசன் இத்திரைப்படத்தில் மோகன் பூர்ணிமா நடித்திருப்பார். இந்த படத்திற்கும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இப்படத்திற்கு பிறகு ஒரு வருடத்திற்கு உள்ளேயே அதிக படங்களில் நடித்து இருப்பார். 1982,1983 ஆகிய 2 வருடங்களில் மட்டுமே மோகன் அவர்கள் 17 திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

மௌன ராகம்: டைரக்டர் மணிரத்தினம் இயக்கத்தில் ரேவதி, கார்த்திக் உடன் மோகன் இணைந்து நடித்த படம் மௌன ராகம். இத்திரைப்படம் 250 நாட்கள் மேல் ஓடியது.மோகன் படங்கள் அனைத்திலுமே பாடல்கள் எல்லாம் வெற்றிப் பாடலாகவே அமைந்திருக்கும். இவரது திரைப்படத்திற்கு பெரும்பாலும் இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா.

200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களின் மொத்த லிஸ்ட்: மோகன் நடித்த வேங்கையின் மைந்தன், நூறாவது நாள், நான் பாடும் பாடல், உதயகீதம், தென்றலே என்னை தொடு, குங்குமச்சிமிழ், இதய கோவில், பிள்ளை நிலாஆகிய திரைப்படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.

mic-mohan-cinemapettai-01
mic-mohan-cinemapettai-01

“மைக் மோகன்” என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் நடிகர் மோகன். இவர் படம் திரையிடப்படுகிறது என்றால் மற்ற பெரிய நடிகர்களின் படம் திரையிடுவதில்லை .

Trending News