தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் ஜிஎம் குமார். இவர் வெயில், அவன் இவன் மற்றும் தாரை தப்பட்டை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பாராட்டை பெற்றார்.
ஜிஎம் குமார் பொருத்தவரை பாலா படத்தில் ஏதாவது ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும் இதுவரைக்கும் பாலா தான் ஜிஎம் குமாரை அறிமுகப்படுத்தி வைத்தார் என பலரும் நினைத்து வருகின்றனர்.
ஆனால் உண்மை அது இல்லை இவர் சினிமாவின் ஆரம்ப காலத்திலேயே பல படங்களில் பணியாற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக 4 படங்களை இயக்கியுள்ளார். ஜிஎம் குமார் பிரபுவை வைத்து அறுவடை நாள் என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன்பிறகு பிக் பாக்கெட், இரும்பு பூக்கள் படங்களை இயக்கினார். ஆனால் மோகனை வைத்து நான்கவதாக உருவம் என்ற ஒரு பிரம்மாண்டமான வெற்றிப் படத்தைக் கொடுத்தார். இப்படம் திரில்லர் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கை போடு போட்டது.
அவன் இவன் படத்தில் ஐனஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதனால் பலரும் இவரை ஐனஸ் என அழைக்க ஆரம்பித்தனர். தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.