அன்று முதல் இன்று வரை வரதட்சணை கொடுமை என்பது இந்தியா முழுவதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. கடந்த சில நாட்களாக பரபரப்பை கிளப்பிய கேரளத்துப் விஸ்மயா என்ற இளம் பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த சம்பவம் கேரளாவை அதிர்ச்சியில் உலுக்கியது.
இதனையடுத்து சமூக வலைத்தளங்கள் மட்டும் இல்லாமல் நேரடியாகவும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். பெண்களையும் ஒரு பொருளாக பார்க்கும் இந்த சமுதாயத்தில் வரதட்சனை என்ற வார்த்தை அழிய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கேரளா சினிமாவில் கொடிகட்டி பறக்கும் மோகன்லால் பெண்களுக்கு ஆதரவாக மற்றும் சுயமரியாதை முக்கியம் என்பது போன்ற விழிப்புணர்வு ஆராட்டு படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தின் காட்சியை வெளியிட்டு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மோகன்லால் பெண்களுக்கு சுய மரியாதை முக்கியம், வரதட்சணை வாங்குவது தவறு – கொடுப்பதும் தவறு என்பது போன்ற கருத்தினை அதில் பதிவிட்டுள்ளார்.
சமூகத்தில் ஏதோ ஒரு பிரச்சனை என்று விட்டு விடாமல் மக்களுக்காக மோகன்லால் வெளியிட்டுள்ள இந்த பதிவு அதிக பாராட்டுகளைப் பெற்று வருகின்றது.
![mohan-lal](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/06/mohan-lal.jpg)