லாலேட்டனின் எம்புரான் எப்படி இருக்கு.? முழு விமர்சனம் இதோ!

Empuraan Movie Review: மலையாள சினிமாவில் பெரும் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் எல் 2 எம்புரான் படத்தை பிரித்விராஜ் இயக்கியிருக்கிறார். 2019ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

மோகன்லால், மஞ்சு வாரியர், கிஷோர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். முதலமைச்சர் பிமல் நாயர் இல்லாததால் அந்த இடத்திற்கு ஜெட்டின் ராம் தாஸ் ஆட்சி செய்கிறார்.

அவருடைய கடுமையான ஆட்சி காலம் அவரது சகோதரி பிரியாவிற்கு பிடிக்கவில்லை. ஸ்டீபனை (மோகன்லால்) தவறாக நினைத்த பிரியா ஒரு கட்டத்தில் மேல் அவரைப் பற்றி புரிந்து கொள்கிறார்.

எம்புரான் படத்தின் விமர்சனம்

மேலும் முதல்வர் ஸ்டீபனை பழி வாங்குவதற்காக பல குற்றங்களை சுமத்தி ஜெயிலுக்கு அனுப்புகிறார். ஆனால் அங்கு சையத் மசூத் (பிரித்விராஜ்) உதவியுடன் போதைப் பொருள் கடத்தும் முதல்வரின் செயல்களை முறியடிக்கிறார் ஸ்டீபன்.

அதோடு ஸ்டீபன் மற்றும் பிரியா இருவரும் இணைந்து பாபியின் திட்டங்கள் அனைத்தையும் முறியடிக்கிறார். தனது தேசத்தில் இருந்து வெளியேறும் ஸ்டீபன் அதன்பிறகு நிழலுலக தாதா ஆபிரகாம் குரேஷியாக மாறுகிறார்.

அவர் உலக அளவில் மக்களுக்காக என்ன செய்கிறார் என்பதுதான் எம்புரான் மீதி கதை. முரளி கோபியின் கதையில் எம்பிரான் படத்தை அழகாக உருவாக்கி இருக்கிறார் பிரித்விராஜ்.

எம்புரான் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் அனைவருக்குமே சமமான முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறார். மோகன்லால் நடிப்பு அபாரமாக உள்ளது.

ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்திற்கு கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார்கள். பின்னணி இசையில் மேலும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் எம்புரான் வசூல் வேட்டை செய்யும்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3.5/5

Leave a Comment