வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கமலை வைத்து நான் இயக்கிய மொக்கை படம்.. பல வருஷம் கழிச்சு பேசிய இயக்குனர்.. ஆனா டுவிஸ்ட் இருக்கு

கமல்ஹாசனை வைத்து நான் இயக்கிய அந்தப் படம் மொக்கப் படம் என்று பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் வெற்றிப் படங்கள் கொடுத்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆர்.வி. உதயகுமார். உரிமை கீதத்தில் தொடங்கிய இவரது திரைப்பயணம், கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்கார வேலன், எஜமான், பொன்னுமணி, ராஜகுமாரன், சுபாஷ் என பல ஹிட் படங்களைக் கொடுத்து 80, 90 களில் முன்னணி இயக்குனராக இருந்தவர்.

தற்போது சினிமாவில் துணை கேரக்டர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 32 ஆண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த அப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் தற்போது அப்படத்தை மொக்கை படம் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் கூறியதாவது:

ஒரு நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அவர், ’’சினிமாவில் சில நேரங்களில் மொக்கை படம் ஓடும். நான் கமல் சாரை வைத்து எடுத்த படம் அது. அப்படத்திற்கு கதையே இல்லை. கதையே இல்லாம எடுக்கப்பட்ட படம் தான் அது. சின்ன குழந்தையா இருக்கிறப்போ, தொலைந்துபோன பெண்ணை கண்டுபிடித்து கல்யாணம் செய்ய வேண்டும். இந்த ஒன் லைனை தயாரிப்பாளர் ஓகே சொன்னதுதான் எனக்கு ஆச்சயர்மே! இளையாராஜா தான் இப்படத்திற்கு இசை.

இப்படத்தின் ரிலீசுக்கு முன் ரசிகர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அதில் இப்படம் பார்க்க வரும்போது மூளையைக் கழட்டி வைத்துவிட்டு வாருங்கள் என்று தான் எழுதினேன். ஏனென்றால் இப்படத்தில் கதையே இல்லை என்பதால் ஒருவேளை அப்படி எழுதாவிட்டால், இப்படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் என்னை திட்டி விடுவார்கள் என்பதால் இப்படிச் செய்தேன்.

ஆனாலும், நான் படத்துக்காக நன்றாக உழைப்பவன் என்பதால், அப்படத்திற்கு கதையே இல்லை என்றாலும் திரைக்கதைக்காக மெனக்கெட்டு உழைத்தேன். அதனால் படத்தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ரசிகர்கள் சிரிக்க வேண்டும் என பலவற்றை உள்ளே சேர்த்தோம். படமும் வெற்றி பெற்றது. ஒரு படம் ஜெயிக்க நல்ல கதை மட்டுமல்ல நேரமும் நன்றாக அமைய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

சிங்காரவேலன்

கடந்த 1992 ஆம் ஆண்டு கமல், குஷ்பு, பாடகர் மனோ, மனோரமா, கவுண்டமணி ஆகியோர் நடிப்பில், ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் பஞ்சு அருணாச்சலம் கதை எழுத, இளையராஜா இசை (அனைத்துப் பாடல்களும் பட்டிதொட்டி எல்லாம் ஹிட்டு), அப்துல் ரகுமான் ஒளிப்பதிவில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. ஆர்.டி.பாஸ்கர் இப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News