வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பண மோசடி வழக்கு.. நேரில் ஆஜராக தோனிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை கிங்ஸ் அணியின் வீரருமான தோனிக்கு ஜார்கண்ட் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பாவானாக ஜொலித்தவரும், இந்தியா அணிக்கு மூன்று வகையான போட்டியிகளிலும் கோப்பைகளைப் பெற்றுத் தந்த ஒரே கேப்டன் தோனி. இவர் ஆடுகளத்தில் இருக்கும்போது கூலாகவே எதிரணி வீரர்களை டீல் செய்து, அணியை வழி நடத்தினார். சர்வதேச கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அவரை இம்முறை சென்னை அணி 4 கோடிக்கு தக்க வைத்துள்ளது.

தோனியின் நண்பர்கள் செய்த பண மோசடி

இந்த நிலையில், எம்.எஸ். தோனி தனது பழைய நண்பர்களான மஹிர் திவாகர் மற்றும் செளமியா தாஸ் ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்சனை பற்றி தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தோனியின் நண்பர்களான இருவரு ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட் லிமிட்டட் என்ற நிறுவனத்தின் கீழ் தோனியின் பெயரில் கிரிக்கெட் பள்ளிகளை திறக்கும் திட்டத்தின் சேர்ந்து வேலை செய்தனர். ஆனால் இருவரும் தன்னை ஏமாற்றியதாக தோனி அவர்கள் மீது புகார் அளித்திருந்தார். இவ்வழக்கின் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தோனி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார்.

தோனி அளித்த புகாரி, தன் நண்பர்களுடன் 2021 ஆம் ஆண்டே ஒப்பந்தம் முடிந்துவிட்டது. அதன்பிறகும் தன் பெயரைப் பயன்படுத்தி கிரிக்கெட் பள்ளிகள் ஆரம்பித்துள்ளனர். தன் பெயரைப் பயன்படுத்தி திவாகர், செளமியா தாஸ் இருவரும் 15 கோடி ஏமாற்றியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதைஎதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கின் தோனி நேரில் ஆஜராகி தனது பதிலைத் தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News