Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவின் நண்பர் செல்வம் ஆடம்பரமாக அப்பாவின் 60வது கல்யாணத்தை பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் கையில் பணம் இல்லாததால் சோகத்தில் குடித்துவிட்டு முத்துவிடம் புலம்பினார். இதை பார்த்த முத்து என் நண்பர் கஷ்டத்துக்கு நான் துணையாக நின்னு உதவி செய்வேன் என்று பணத்தை நான் தருகிறேன் என வாக்குறுதி கொடுத்தார்.
இது விஷயமாக மீனாவிடம் போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்த பணத்தை கேட்டு பிரச்சினை பண்ணினார். ஆனால் மீனா இது தேவையில்லாத ஆடம்பர செலவு, இதற்காக எல்லாம் பணத்தை கொடுக்க முடியாது என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார். அதோடு விடாமல் முத்துவின் நண்பர் செல்வத்தை நேரடியாக சந்தித்து நம்முடைய சக்திக்கு மீறி செலவு செய்யக்கூடாது.
நண்பன் குடும்பத்தார் மூலம் அசிங்கப்பட்ட முத்து
அப்படி செலவு செய்தால் அதன் பின் நாம் மட்டும் இல்லாமல் நம்முடைய குடும்பமும் கஷ்டப்படும். அதனால் நம்மால் என்ன முடியுமோ அதை தான் செலவு செய்து நிம்மதியாக வாழ வேண்டும் என்ற அட்வைஸ் பண்ணி வந்தார். இது எதுவும் தெரியாத முத்து, போட்டியில் ஜெயித்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை செல்வத்திடம் கொடுக்கிறார்.
ஆனால் செல்வம் வேண்டாம் என்று மறுத்தநிலையில் என்ன காரணம் என்று முத்துவுக்கு தெரிய வந்த பொழுது மொத்த கோபத்தையும் மீனாவிடம் காட்டும் விதமாக வீட்டிற்கு போய் சண்டை போடுகிறார். அப்பொழுது மீனா, நான் அந்த அண்ணன் மேல் இருக்கும் அக்கரையில் தான் சொன்னேன். இது ஒன்னும் தப்பாக இல்லை என்று சொல்லும் பொழுது நான் பணத்தை கொடுத்து விட்டேன் என்று முத்து சொல்கிறார்.
உடனே கோபப்பட்ட மீனா அப்படி என்றால் உங்களுக்கும் உங்கள் அண்ணன் மனோஜுக்கும் என்ன வித்தியாசம். அவரும் இப்படித்தான் சொல்லாமல் பணத்தை எடுத்துட்டு போகிறார். அதை தான் நீங்களும் இப்பொழுது பண்ணி இருக்கிறீர்கள் என்று கோபத்துடன் பேசுகிறார். இதை கேட்டதும் முத்து நானும் அவனும் ஒன்றாய் என்று கோபப்பட்டு மீனாவை அடிக்க கை ஓங்கி விட்டார்.
இதனை அடுத்து முத்து, வழக்கம்போல் செல்வத்தின் அப்பா அம்மா ஃபங்ஷனுக்கு கிளம்புகிறார். அப்பொழுது அண்ணாமலை இது உன் மனைவியுடன் போக வேண்டிய ஒரு சிறந்த ஃபங்ஷன். அதனால் மீனாவையும் அழைத்துட்டு போ என்று சொல்ல மீனாவை முத்து கூட்டிட்டு போகிறார். ஆனால் போகும் பொழுது மீனா மீது முத்து கோபத்துடனே இருந்தார்.
ஆனால் பங்க்ஷனில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் பார்க்கும் பொழுது மீனா சொல்வதுதான் சரி. பொண்டாட்டி பேச்சைக் கேட்கவில்லை என்றால் இந்த மாதிரி தான் நடக்கும் என்பதற்கு உதாரணமாக முத்து அங்கே அசிங்கப்பட்டு விட்டார். அதாவது செல்வம் வீட்டுக்கு போன பொழுது செல்வம் சொந்தக்காரர்களுடன் சேர்ந்து சரக்கு அடித்துக் கொண்டு வீண் செலவை செய்ததை முத்து பார்க்கிறார்.
இருந்தாலும் அங்கு வச்சு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காக முத்து மீனாவை கூட்டிட்டு சாப்பிட உட்காருகிறார். ஆனால் அந்த நேரத்தில் அங்கே செல்வத்தின் சொந்தக்காரர்கள் சாப்பாடு சரியில்லை என்று பிரச்சினை பண்ணி செல்வத்திடம் சண்டை போடுகிறார்கள். செல்வம் சமாதானமாக பேசிய நிலையில் சொந்தக்காரர் செல்வத்தை அடித்து விடுகிறார்.
இதை பார்த்ததும் முத்து எப்படி என்னுடைய பிரண்டை அடிக்கலாம் என்று கோபத்துடன் போகிறார். இருந்தாலும் சொந்தக்காரர்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்று மீனா பொறுமையாக எடுத்து சொல்கிறார். ஆனால் எதையும் காது கொடுத்து கேட்காத முத்து அந்த சண்டையை விளக்க முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு முத்து கோபப்பட்டு செல்வத்தின் மாமாவை அடித்து விடுகிறார்.
கடைசியில் செல்வம் வீட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முத்துவை அடித்து கீழே தள்ளி அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தும் அளவிற்கு பேசி விட்டார்கள். இதை எல்லாம் பார்த்த மீனா அவமானத்தில் எதுவும் சொல்ல முடியாமல் தலை குனிந்து நிற்கிறார். பொண்டாட்டி எது சொன்னாலும் சரி என்று யோசிக்காத முத்துக்கு இந்த அவமானமும் அசிங்கமும் தேவைதான்.
இன்னும் ரோகிணி மற்றும் லோக்கல் ரவுடி சிட்டிபாபு மூலம் முத்து மற்றும் மீனாவுக்கு பிரச்சனை வரக் காத்துக் கொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து இந்த நாடகத்தில் கதாநாயகராக இருக்கும் முத்து மீனாவுக்கு மட்டுமே பிரச்சனையும் அவமானமும் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் எல்லா பொய்யும் பித்தலாட்டமும் செய்த ரோகிணி மற்றும் மனோஜ் சந்தோஷமாக நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.