வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பணம் பாதாளம் வரை செல்லும்.. விஜய் டிவியின் பித்தலாட்டத்தை வெளிப்படையாக பேசிய சாய் பல்லவி

நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமான சாய் பல்லவி தற்போது டாப் நடிகர்களுக்கு ஜோடி போட்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் சாய் பல்லவி பெற்றுள்ளார். சாய் பல்லவிக்கு எப்போதுமே நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு.

அதுவும் தனுசுடன் ரவுடி பேபி பாடலுக்கு வேற லெவலில் டான்ஸ் ஆடி இருந்தார். குழந்தைகள் முதல் அனைவரையும் இந்த பாடல் கவர்ந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சாய்பல்லவி நடனப் போட்டிகளை நான் நம்ப மாட்டேன், அதன் மீது எனக்கு வெறுப்பு தான் உள்ளது என கூறியுள்ளார்.

Also Read : ஆஸ்காருக்கு அடி போடும் சாய் பல்லவி.. சமூக வலைத்தளத்தில் வெளிவந்த தகவல்

இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சி மூலம் தான் சினிமாவில் நுழைந்தார். அந்தப் போட்டியில் சாய்பல்லவிக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது.

ஆனால் அந்த போட்டியில் முதலிடம் பெற்றதற்கு காரணம் பணம் பலம் தான் என்பது போல சொல்லி சாய் பல்லவி வருத்தப்பட்டு இருந்தார். மேலும் திறமையானவர்களுக்கு எப்போதுமே நடன நிகழ்ச்சியில் மரியாதை கிடையாது. பொதுவாக தொலைக்காட்சியில் பணத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

Also Read : அவ்வளவு நெருக்கமால்லாம் நடிக்க முடியாது.. பிரபல நடிகரை வெறுத்து ஒதுக்கிய சாய் பல்லவி

இல்லையென்றால் பிரபலத்தின் வாரிசுகளாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படும். இதனால்தான் நடன போட்டிகளை நம்புவதில்லை மற்றும் அவற்றை வெறுக்கிறேன் என்று சாய் பல்லவி கூறியுள்ளார். பொதுவாக பல தொலைக்காட்சிகளில் இவ்வாறு பணபலம் தான் ஜெயிக்கிறது.

ஆனால் சாய் பல்லவி விஜய் டிவி என்று குறிப்பிடாமல் பெரும்பாலான தொலைக்காட்சி இவ்வாறு தான் இருக்கிறது என்று கோபமாக பேசி இருந்தார். சாய்பல்லவி அந்த போட்டியில் இரண்டாம் இடம்பெற்றாலும் பிரபுதேவா கோரியோகிராப் செய்த பாடலுக்கு ஆடி உள்ளார். அதுமட்டுமின்றி அவருக்கான அங்கீகாரம் சினிமாவில் கிடைத்துள்ளது.

Also Read : மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி.. சபாஷ், சரியான முடிவு!

Trending News