ஸ்பானிஷ் மொழியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் தான் மணி ஹெய்ஸ்ட்(money heist). ஆனால் இந்த வெப் சீரிஸுக்கு ஒரு கதை உள்ளது. முதன்முதலில் இந்த மணி ஹெய்ஸ்ட் தொடர் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
ஆனால் அது தோல்வியை தழுவியது. நினைத்த அளவு வரவேற்பை பெறவில்லை என்பதால் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸின் முதல் பாகத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வெளியிட்டது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான பிறகு மணி ஹெய்ஸ்ட்க்கு கிடைத்த வரவேற்பு அபரிதமானது என்பது அனைவருமே அறிந்த ஒன்று. தற்போது மணி ஹெய்ஸ்ட் சீரிஸ் ஐந்தாவது சீசன் ஒளிபரப்புக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது சீசன் மட்டும் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. அதில் முதல் வால்யூம் செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது வால்யூம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்வொர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மணி ஹெய்ஸ்ட் சீரிஸ் மூலம்தான் இந்தியாவில் மிக அதிகம் பயனாளர்களை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 சீரிஸ் தமிழ் மொழியிலும் நேரடியாக வெளியாக உள்ளது. கடைசி கட்டத்தை எட்டியுள்ளது மணி ஹெய்ஸ்ட் சீரிஸ் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம்.