சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய கவின் பொண்டாட்டி.. லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுத்த மோனிகா

Actress Losliya: இப்போது சோசியல் மீடியாக்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் ஒரே விஷயம் கவின், மோனிகா திருமணம் பற்றி தான். அதாவது கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகாவை கடந்த 20ம் தேதி விமரிசையாக திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் லாஸ்லியா நிலைமை இப்படி ஆயிடுச்சே என்று பரிதாபப்பட்டும் வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோடி புறாக்களாக இருந்த இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இரு துருவங்களாக மாறிப் போனார்கள்.

Also read: லாஸ்லியாவுக்கும் கவினின் வருங்கால மனைவிக்கும் இப்படி ஒரு தொடர்பா.? சந்தேகத்தை தீர்த்து புகைப்படம்

ஆனாலும் இவர்கள் எப்படியாவது சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் கவினின் இந்த திருமணம் பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. அதை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் லாஸ்லியாவும் கவின் திருமணம் நடந்த அதே நாளன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார்.

அதாவது ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது கவினின் மனைவி மோனிகா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

Also read: லாஸ்லியா, அனிதா வரிசையில் களமிறங்கும் முதல் ஆண் நியூஸ் ரீடர்.. உறுதியானது பிக்பாஸின் 4ம் போட்டியாளர்

அதாவது அவர் தன்னுடைய தாலியை வெளியே தெரியும் படி தொங்கவிட்டு நான் கவினின் அதிகாரப்பூர்வமான பொண்டாட்டி என்று குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இது லாஸ்லியாவுக்கான மறைமுக பதிலடி என்று கமெண்ட் கொடுத்து வருகின்றனர். ஏனென்றால் லாஸ்லியா தான் கவினை கழட்டி விட்டார் என்ற ஒரு பேச்சு இப்போது வரை இருக்கிறது.

அதனாலேயே மோனிகா இப்படி ஒரு பதிவை போட்டு அவரை வெறுப்பேற்றி இருக்கிறார். ஏற்கனவே கவின் திருமணத்தால் லாஸ்லியா நொந்து போய் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இதில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் மோனிகா கொடுத்திருக்கும் இந்த பதிலடி தான் பல விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

Also read: கவின் கல்யாணம் முடிஞ்சாலும் நிம்மதியா இருக்க விட மாட்ட போல.. லாஸ்லியா போட்ட வைரல் பதிவு

Trending News