வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மகாலட்சுமியை விட, இந்த அல்வா இனிப்பு கம்பிதான்.. 90’s கிட்ஸ்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட ரவீந்தர்

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் இளம் காதல் ஜோடியை போலவே ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர். இணையத்தில் ட்ரெண்டிங் கப்புலாக இருக்கும் இவர்களை வைத்து விஜய் டிவி தன்னுடைய டிஆர்பி-யை ஏற்றுவதற்காக ‘வந்தால் மகாலட்சுமியே’ என்ற என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

இதில் இவர்களுக்கு விதவிதமான டாஸ்க்குகள் நடத்தப்பட்டு சர்ச்சைக்குரிய கேள்விகளையும் கேட்டிருக்கின்றனர். அந்த கேள்விகளுக்கு எல்லாம் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் பதில் அளித்த நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர்.

Also Read: ரவீந்தர் கையில் செருப்பை கொடுத்த விஜய் டிவி.. ட்ரெண்டிங் ஜோடியை கூப்பிட்டு கேவலப்படுத்திய சம்பவம்

சீரியல் நடிகையான மகாலட்சுமி, காசு பணம் இருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொள்ள காரணம் பணம்தான் என்று பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால் இரண்டு வருடங்களாக ரவீந்தர் மகாலட்சுமி இருவரும் காதலித்த நிலையில் அவர்களிடம் இருக்கும் புரிதலையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.

இதையடுத்து ரவீந்தர் கையில் கொடுக்கப்பட்ட பொருள்களை வைத்து மனைவி மகாலட்சுமி கவிதை சொல்ல வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது, முதலில் ரவீந்தர் கையில் அல்வா கொடுத்ததும் ‘நான் சுவைத்த இனிப்பில் மகாலட்சுமி விட கம்மி தான் இந்த அல்வாவின் சுவை’ என்று பதில் அளித்து 90’s கிட்ஸ்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டார்.

Also Read: ரவீந்தர்- மகாலட்சுமியின் அநாகரீக பேட்டி.. கோபத்தில் கொந்தளித்து மன்னிப்பு கேட்கச் சொன்ன பிரபலம்

அதைத்தொடர்ந்து மல்லிகைப்பூ கொடுக்க, ‘இந்த மல்லிகை பூ வாடலாம். ஆனால் உன் மீது நான் வைத்திருக்கும் பாசம் வாடாது’ என்று சினிமா டயலாக் அடித்துவிட்டார் ரவீந்தர். இவ்வாறு ரவீந்தர்-மகாலட்சுமி இருவரும் இந்த நிகழ்ச்சியில் கொஞ்சம் ஓவராகவே நடந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பார்த்தபிறகு ரவீந்தருக்கு இப்படி அழகான மனைவியா என்று பலரும் ஆச்சரியப்படுகின்றனர். மேலும் சிலருக்கு ‘பணம் பாதாளம் வரை பாயும்’,  ‘பணம் பத்தும் செய்யும்’ போன்ற பழமொழிகள் இந்த ஜோடிகளை பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

Also Read: சுயரூபத்தை காட்டும் ரவீந்தர்.. கல்யாணத்துக்கு பின் சுயநலமாய் மகாலட்சுமிக்கு வைத்த ஆப்பு

Trending News