வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

குட்டி சாத்தான் வாழும் ஊர் எது தெரியுமா.? அங்க கொசு தொல்லையே இல்லையாம்

மாலை பொழுது வந்தாலே, ஓடி போயி வீட்டு ஜன்னலை அடைக்க வேண்டி இருக்கு. 10 நிமிடம் திறந்திருந்தாலும், வீடே கொசு பண்ணையாக மாறி விடுகிறது. கொசு தொல்லை இல்லாத வீட்டிலும், இரவு நேரம் கரண்ட் போனால், கொசு உரித்து உப்பை தடவி விடும்.

தவிர, இது டெங்கு நோய் காண காலம் என்பதால் மருத்துவர்களும் எச்சரித்து வருகின்றனர். இப்படி நாம் இங்கு கொசு தொல்லையுடன் வாழும் நேரத்தில், ஒரு ஊரில் ஒரு கொசு கூட இல்லையாம். ஆம், ஐஸ்லாந்து கொசு இல்லாத சூழல் கொண்ட நாடு என்கின்றனர். அதன் குளிர்ந்த காலநிலை மற்றும் காற்றோட்டமான சூழ்நிலைகளில் கொசுக்கள் வளருவது கடினமான விஷயமாக இருக்கின்றன.

ஐஸ்லாந்து பசுமையான நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. புவிவெப்ப ஆற்றல் சுமார் 90% ஐஸ்லாந்திய வீடுகளை வெப்பப்படுத்துகிறது. அதே நேரத்தில் நீர் மின்சாரம் உள்நாட்டு பயன்பாடு மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிற்கும் மின்சாரத்தை உருவாக்குகிறது.

ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஐஸ்லாந்து கோடை மாதங்களில் நள்ளிரவு சூரியன் எனப்படும் நிகழ்வை அனுபவிக்கிறது. மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜூலை நடுப்பகுதி வரை, ஐஸ்லாந்தின் சில பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 24 மணிநேரம் சூரிய ஒளி தென்படுமாம்.

ஐஸ்லாந்தில் சிறிய மக்கள்தொகை இருந்தபோதிலும், குறிப்பிடத்தக்க இலக்கிய மரபு மற்றும் ஆழமான வேரூன்றிய இலக்கிய கலாச்சாரம் உள்ளது. ஐஸ்லாந்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன. தவிர நம் ஊர் போலவே, சில கதைகளை அங்கு இருக்கும் மக்கள் நம்புகிறார்கள்.

அப்படி, குட்டிச்சாத்தான்கள், பூதங்கள் தீவின் கரடுமுரடான நிலப்பரப்பில் வசிப்பதாக நம்பப்படும் பல ஐஸ்லாந்திய நாட்டுப்புறக் கதைகள் உள்ளன.பல ஐஸ்லாந்தர்கள் இந்த மாய மனிதர்களின் இருப்பை உண்மையாக நம்புகிறார்கள். அவர்களின் வாழ்விடங்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.

Trending News