Vishal: 2025ல் விடாமுயற்சி ரிலீஸ் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் பொங்கல் ரேஸ் கலை கட்டி இருக்கிறது. பல சிறு பட்ஜெட் படங்கள் அஜித் விலகியதால் களத்தில் குதித்துள்ளன.
அதன்படி ஜெயம் ரவி, சிபிராஜ், சண்முக பாண்டியன், மிர்ச்சி சிவா என அனைவரும் ஒருவருக்கொருவர் மோத தயாராகிவிட்டனர். இந்த வரிசையில் விஷாலின் மதகஜராஜாவும் இணைந்துள்ளது.
12 வருடங்களுக்கு முன்பு 2013 பொங்கலுக்கு வரவேண்டிய படம் தான் இது. ஆனால் கடும் போராட்டத்திற்கு பிறகு இந்த பொங்கலுக்கு வருவது நிச்சயம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தான்.
ஏனென்றால் அப்போதே இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பாடல்களும் ஹிட்டானது. மேலும் சந்தானத்தின் கவுண்டர் காமெடியை காணவும் ரசிகர்கள் தயாராகி விட்டனர்.
இந்நிலையில் இப்படத்தைப் போல சில வருடங்களாக கிடப்பில் கிடந்த மற்றொரு படமும் தூசி தட்டப்பட்டு விட்டது. அதாவது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 எப்போதோ எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.
மதகஜராஜா போல் தூசி தட்டப்பட்ட ஹாரர் படம்
ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி, பூர்ணா என பலர் படத்தில் நடித்திருந்தனர். அதிலும் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் ஆடை இல்லாமல் நடித்திருக்கிறார் என்ற தகவலும் அப்போது வைரலானது.
அதனாலேயே இப்படத்தின் ரிலீஸை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதற்கு மற்றொரு காரணம் இதன் முந்தைய பாகம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.
ஆனால் படம் இன்னும் வெளியாகாததில் ரசிகர்களுக்கு வருத்தம் தான். அதை போக்கும் வகையில் மிஷ்கின் இப்போது அதை தூசி தட்டியுள்ளார். மார்ச் மாதத்தில் இப்படம் வெளியாகும் என்கின்றனர்.
அதற்கான வேலைகளும் ஒரு பக்கம் ஆரம்பித்துவிட்டது. இன்னும் பத்து நாள் இருந்தால் படத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாம் என மிஸ்கின் தயாரிப்பாளரிடம் கேட்டிருக்கிறார்.
ஆனால் எடுத்தவரை போதும் ரிலீஸ் பண்ணலாம் என அவர் சொல்லிவிட்டாராம். ஏற்கனவே படம் சென்சார் ஆகிவிட்டது.
அதனால் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வரும் என்கின்றனர். அப்படியே அந்த துருவ நட்சத்திரம் படத்தையும் கௌதம் மேனன் ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும்.