சமுத்திரகனி படம் ஒன்றை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் யோசித்த வேளையில் ஒரு இயக்குநர் அந்தப் படத்தை தற்போது தயாரித்து முடித்துள்ளார். இந்த படத்தின் விமர்சனங்களை கேட்டு மற்ற தயாரிப்பாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்களாம்.
எப்போதுமே கருத்து ஊசி போடுபவர் சமுத்திரக்கனி. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அநியாயத்திற்கு இவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்ய இனிமேல் கருத்துச் சொல்ல மாட்டார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் சொல்லுறத சொல்லிட்டே இருப்பேன் என கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். சமீபகாலமாக சமுத்திரக்கனிக்கு தமிழை விட தெலுங்கில் நல்ல மார்க்கெட் உருவாகி உள்ளது.
சமுத்திரக்கனி நடிக்கும் படங்கள் அனைத்துமே அக்கட தேசத்தில் மிகப்பெரிய வெற்றியை குவித்து வருகின்றனர். அதேசமயம் தமிழிலும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் உடனடியாக நடித்து முடித்து விடுகிறார்.
அந்த வகையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ரைட்டர். சாதாரண காவல்துறை அதிகாரி வாழ்க்கையை இயல்பாக சொல்லியுள்ளதாம் ரைட்டர் திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் உதவி இயக்குனர் பிராங்க்ளின் ஜோசப் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை பா ரஞ்சித்தே தயாரித்துள்ளார். முதலில் இந்த படத்தை தயாரிக்க யாருமே முன்வரவில்லை எனவும், தற்போது படத்தை பார்த்துவிட்டு பலரும் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவிப்பதாகவும் இயக்குனர் கூறியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி நடித்துள்ளார்.