ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

பெரிய எதிர்பார்ப்பு இருந்தும் கிடப்பில் போடப்பட்ட விஜய் சேதுபதி படம்.. மகாராஜாவுக்கு ஒர்க்கவுட் ஆகாத பேய்

விஜய் சேதுபதி தன்னுடைய கேரியரில் சறுக்கும் நேரத்தில் பட்டையை கிளப்பி தூக்கி விட்ட படம் மகாராஜா. அதற்கு முன் எந்த படமும் கை கொடுக்காத நிலையிலும், நடித்த படங்கள் அனைத்தும் சரியான வியாபாரம் ஆகாமலும் இழுத்தடித்து வந்தது.

காத்து வாக்குல ரெண்டு காதல், டிஎஸ்பி, மேரி கிறிஸ்மஸ் என தொடர்ந்து பிளாப் படங்கள். அதனால் அடுத்தடுத்து இவர் படங்கள் வியாபாரம் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நேரத்தில் தான் அவரது ஐம்பதாவது படமான மகாராஜா 100 கோடி வசூல் கொடுத்தது. நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கினார்.

இப்பொழுது விஜய் சேதுபதி, மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்தில் நடித்து வருகிறார் இந்த படமும் ஓராண்டுக்கு மேல் சூட்டிங் நடைபெற்று வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது அவருக்கு விடுதலை இரண்டாம் பாகம் படம் வெளிவந்தது.

இதனிடையே விஜய் சேதுபதி நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிசாசு இரண்டாம் பாகம் படம் அலமாரியில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவருடைய முந்தைய படங்கள் சரியான வியாபாரம் ஆகாததனால் தான். இப்பொழுது இந்த படத்தை தூசி தட்டி எடுக்கிறார்கள்.

மகாராஜா படத்தை வைத்து பிசாசு இரண்டாம் பாகத்தை வியாபாரம் செய்து விடலாம் என மனக்கோட்டை கட்டி வருகிறார்கள். அடுத்த மார்ச் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். ராக்போர்ட் முருகானந்தம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Trending News