சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்து டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் சில முக்கிய சீரியல்கள் இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும்.
அப்படி பார்க்கும்போது சின்னத்திரை சேனல்கள் அனைத்தும் நல்ல விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அப்படி நமக்கு விருப்பமான சீரியல்கள் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படும் போது அதில் எதை பார்ப்பது என்ற குழப்பம் நமக்கு ஏற்படும்.
தற்போது சின்னத்திரையில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஜீ தமிழின் இரட்டை ரோஜா, விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி, சன் டிவியின் மெட்டி ஒலி இந்த மூன்று தொடர்களில் பிற்பகல் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மெட்டி ஒலி ஆரம்பத்திலிருந்து ஒரு மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற இரண்டு சீரியல்களும் தற்போது தங்களது நேரத்தை மாற்றி மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதனால் இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் எந்த சீரியலை பார்ப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
ஆனால் அனைவரின் விருப்பமாக இருக்கும் ஒரே சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெட்டி ஒலி சீரியல் மட்டும் தான். இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு சன் டீவியில் இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்டது.
ஐந்து பெண்களை வளர்க்கும் ஒரு அப்பாவின் துயரம் மிகுந்த கதையாக இந்த தொடர் ஒளிபரப்பானது. அன்றைய காலகட்டத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்று சன் டிவியை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. மேலும் இந்த சீரியலில் இடம்பெறும் அம்மி அம்மி என்ற பாடல் தமிழகமெங்கும் இன்றும் பிரபலமான பாடல் ஆகும்.
இந்த சீரியலை பார்ப்பதற்காகவே தங்கள் வேலையை எல்லாம் ஒதுக்கி விட்டு டிவி யின் முன்னாடி அமர்ந்த ரசிகர்களும் உண்டு. சுமார் மூன்று ஆண்டுகள் ஒளிபரப்பப்பட்ட இந்த செய்திகள் தற்போது சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது பல சேனல்கள் புத்தம் புது சீரியல்களை ஒளிபரப்பி வருவதால், சன் டிவியின் சீரியலுக்கு மவுசு குறைந்துள்ளது. அதனால் விட்ட இடத்தை பிடிக்கும் விதமாக பழைய சீரியல்களை எல்லாம் தேடி எடுத்து மீண்டும் ஒளிபரப்பி வருகிறது.
ஆரம்பத்தில் மெட்டிஒலி சீரியலுக்கு என்ன வரவேற்பு இருந்ததோ அதைவிட அதிகமாகவே தற்போது உள்ளது. அதனால் எத்தனை சீரியல்கள் வந்தாலும் நாங்கள் விரும்பி பார்ப்பது மெட்டி ஒலி சீரியல் மட்டும் தான் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.